இந்திரா காந்தியின் இன்னொரு முகம்-மிசா, எமர்ஜென்சி, திமுக, முதல்வர் ஸ்டாலின் - 5 முக்கிய பாயிண்டுகள்!
சென்னை: சுதந்திர இந்தியாவின் கறுப்பு அத்தியாயங்கள் என விமர்சிக்கப்படுகிற 1975-ம் ஆண்டு அவசர நிலை அல்லது எமர்ஜென்சி இதே ஜூன் மாதம் 25-ந் தேதி நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி இந்திராவால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய சூழ்நிலை, எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டின் சூழ்நிலை ஆகியவற்றை 5 பாயிண்டுகளில் பார்க்கலாம்
- 1971-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் 352 இடங்களில் வெற்ற் பெற்றது. இடதுசாரிகள் 48, ஜனசங்கம் 22, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களில் வென்றன. உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

- தடா, பொடா சட்டங்களுக்கு முன்னொடியாக 1971-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 1971-ம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்டது The Maintenance of Internal Security Act எனும் மிசா சட்டம்.
- 1971 இந்திரா ஆட்சிக் காலத்தில் நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிகழ்ந்தது. நீதித்துறை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை பயன்படுத்தி பல்வேறு சட்ட திருத்தங்களை இந்திரா காந்தி செயல்படுத்தி வந்தது பெரும் சர்ச்சையானது. இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கு இது என குற்றம்சாட்டி 1973-ல் குஜராத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. 1974-ல் பீகார் மாநிலத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணன் (ஜேஎபி) தலைமையில் எதிர்க்கட்சிகள் உக்கிரப் போராட்டம் நடத்தினர். ஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் வரலாறு காணாத ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது.இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியது. இந்திரா காந்தி அம்மையார் அரசு அடக்குமுறைகளை ஏவிவிட்டது.
-1975-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. மேலும் இந்திரா காந்தி அம்மையார் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். இத்தீர்ப்பால் ஒட்டுமொத்த தேசமும் பெரும் கொந்தளிப்பு நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்திரா அம்மையார் உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர், இந்திரா காந்தி மேல்முறையீட்டு மனுவை 1975-ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி டிஸ்மிஸ் செய்தார். இதனால் இந்திரா காந்தி பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
-1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசர நிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாட்டில் எமர்ஜென்சி அமலுக்கு வந்தது. 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மிசா சட்டம் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வேட்டையாடப்பட்டனர். அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இருந்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக, எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு கட்டளையை ஏற்று மிசா சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். நெருக்கடி நிலையை திமுக அரசு கடுமையாக எதிர்த்ததால் 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 1976-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 1977 மார்ச் வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டில் எமர்ஜென்சியின் கோரதாண்டவம் ரத்த சரித்திரமானது. இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எண்ணற்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை கொட்டடிகளில் கொடூரமாக தாக்கப்பட்டனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சிறையில் அடித்தே கொல்லும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி பின்னாளில் மரணம் அடைந்த சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயர் சிட்டி பாபு தமது டைரி குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இந்த சிறை கொடுமைகளை நீதிபதி இஸ்மாயில் கமிஷன் பதிவு செய்திருக்கிறது. 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. நீதிபதி இஸ்மாயில் கமிஷன், எமர்ஜென்சி கொடுமைகளுக்கான சாட்சியமான ஆவணமாகும். இதனை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசும் ஏற்றுக் கொண்டது. இதன் பின்னர் ஷா கமிஷன் என ஒன்று அமைக்கப்பட்டது. ஷா கமிஷனில் தமிழ்நாடு பங்கேற்கவில்லை. இதனால் ஷா கமிஷன் அறிக்கையில் தமிழ்நாடு தொடர்பான விவரங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications