Flash Back:என் உயரம் எனக்கு தெரியும்-பிரதமர் பதவி தேடி வந்த போது தூக்கி வீசிய கிங் மேக்கர் கருணாநிதி
சென்னை: தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசாத ஒன்றை பேசியதாக பாஜகவினரே கிளப்பிவிட்டு இப்போது மந்தையில் காணாமல் போன ஆடு போல திருதிருவென விழித்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என தலைவர்கள் பலரும் அழைத்த போது 'என் உயரம் எனக்கு தெரியும்- I Know my Hight' என சொல்லி அந்த பதவியை அசால்ட்டாக தூக்கி எறிந்த கிங் மேக்கர்தான் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி என்கிறது சரித்திரம்.
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவினருடனான கலந்துரையாடலில் பூத் கமிட்டி தலைவராக இருப்பவர் பிரதமராகவும் முடியும் என உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். இதனை திரித்து, தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசியதாக பாஜகவினரே கிளப்பிவிட்டனர். பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கும் போது அமித்ஷாவா இப்படி பேசியது ? என பெரும் சர்ச்சை வெடிக்க இப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களிடம் விளக்கம் தருகிறார்.

மேலும் தமிழர் 2 பேர் பிரதமராவதை தடுத்தது திமுக என அமித்ஷா பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசியலில் தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜருக்கு பிரதமர் பதவி தேடி வந்தது. அப்போது லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா அம்மையாரை பிரதமராக்கினார் காமராஜர். பின்னர் மூப்பனார் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. அதை மூப்பனாரே நிராகரித்தார். இந்த வரலாறுகள் மட்டுமே இன்று வரை பேசப்படுகிறது.
மறைந்த திமுக தலைவரான முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் பிரதமர் பதவி தேடி வந்தது. 1997-ம் ஆண்டு தேவகவுடா பிரதமர் பதவியில் இருந்து விலகிய போது, கருணாநிதியை பிரதமராக்க சிலர் முன்மொழிந்தனர். ஆனால் அப்போது கருணாநிதி சொன்ன வார்த்தை இன்றளவும் இந்திய அரசியலில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட வாக்கியமாக உள்ளது. அதுதான் 'என் உயரம் எனக்கு தெரியும்- I Know my Hight' என்கிற மகத்தான வாக்கியம். கருணாநிதியை பிரதமர் பதவி தேடி வந்தது என்பதை தேவகவுடா, ப.சிதம்பரம் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் பகிரங்கமாகவே பேசி உள்ளனர். கருணாநிதியிடமும் இதே கேள்வி கேட்கப்பட்ட போதெல்லாம் 'என் உயரம் எனக்கு தெரியும்- I Know my Hight' என்ற பதிலையே தந்திருக்கிறார். அத்தகைய மகத்தான மனிதர் கருணாநிதிதான் விபி சிங், தேவகவுடா, குஜ்ரால் என பிரதமர்களை தேர்வு செய்த கிங் மேக்கராகவும் இந்திய அரசியலில் ஒளிவீசியவர் என்பது மிகையல்ல.!
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications