கதற கதற போனில் கேவலமாக திட்டிய ஜெயலலிதா.. காரணம் அதுதானாம்.. நக்கீரன் கோபால் சொன்ன சுவாரசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரான நக்கீரன் ஆசிரியர் கோபால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிக கடுமையாக எதிர்த்தவர், இதற்காக நக்கீரன் கோபால் எதிர்கொண்ட நெருக்கடிகள், வழக்குகள், உயிர் அச்சுறுத்தல்கள் ஏராளம். ஆனால் நக்கீரன் பத்திரிகையை தொடங்குவதற்கு முன்னரே ஜெயலலிதாவிடம் தாம் வசை வாங்கியதை சுவாரசியத்துடன் பகிர்ந்துள்ளார் நக்கீரன் கோபால்.

யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளதாவது: சென்னைக்கு வந்து சாவி பத்திரிகையில் வேலை கேட்டேன். அங்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டதால் எம்ஜிஆர் நடத்திய தாய் பத்திரிகைக்கு போக சொன்னார்கள். எம்ஜிஆர் நிறுவனராக இருந்து நடத்தியது தாய் பத்திரிகை. அதன் ஆசிரியராக இருந்தவர் மறைந்த வலம்புரிஜான்.

Flash Back: Nakkeeran Editor Gopal shares Phone Conversation with Jayalalithaa

வலம்புரிஜான் என் ஓவியங்களைப் பார்த்துவிட்டு லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்ற வாய்ப்பு வந்தார். அப்போது ஊதியம் ரூ440. ஒரு ஆண்டு கழித்து ரூ100 ஊதிய உயர்வு கேட்டேன். அப்போது வலம்புரிஜான் அதனை தர மறுத்தார்.

தாய் பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்த காலத்தில் நெஞ்சினிலே ஒரு கனல் என ஜெயலலிதா தொடர் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். அந்த தொடருக்கு நான் தான் லே அவுட் ஆர்ட்டிஸ். ஒருநாள் வலம்புரிஜான் என்னை அழைத்து போன் உங்களுக்குதான் என்றார். எதிர்முனையில் பேசிய பெண்மணி ஆங்கிலத்திலேயே மிக மிக கேவலமாக 7 தலைமுறைகளையும் சேர்த்து திட்டி திட்டி பேசுகிறார். என்னால் அதை தாங்கி கொள்ள முடியாமல் வலம்புரிஜானிடம், இந்த பொம்பளை இவ்வளவு கேவலமா பேசுது உங்களுக்குதான் என கொடுத்தேன். அவரோ நான் பேசுவது எதிர்முனையில் கேட்காதவாறு அமுக்கிக் கொண்டு யெஸ் மேமம், ஓகே மேம் என்றார்.

பின்னர் நான் லே அவுட் செய்த பக்கத்தை எடுத்துப் பார்க்க சொன்னார். நானும் எடுத்துப் பார்த்தேன். ஜெயலலிதாவின் படங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் போட்டிருந்தேன். என்ன தப்பு என எனக்கும் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் வலம்புரி ஜான் அதை சரியாக பார்க்க சொன்னார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. ஜெயலலிதா என்பதற்கு முன்னால் செல்வி. என போடாமல் விட்டிருந்தேன். அதற்குதான் ஜெயலலிதா அப்படி காதில் ரத்தம் வழியும் அளவுக்கு என்னை திட்டித் தீர்த்தார். இவ்வாறு நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+