வாடகை தாய் மூலம் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை.. பூதாகரமாகி புஸ்வானமான பிளாஷ்பேக் 2022
சென்னை: திருமணமான 4 மாதங்களில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் இதன் விசாரணையில் தமிழக மருத்துவக் குழுவிடம் தம்பதி அளித்த விளக்கத்தில் மிகப் பெரிய டிவிஸ்ட் இருந்ததை மறக்க முடியுமா?
பொதுவாக டிவி சீரியல் நடிகர், நடிகைகள், சினிமா நடிகர், நடிகைகளுக்கு திருமணம், காதல், விவாகரத்து, கிசுகிசு என வந்தால் போதும் ரசிகர்கள் அதுகுறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள்.
அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திருமணத்திற்கு பெண் வேண்டுமென்றால் நயன்தாரா போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் இளைஞர்கள் எதிர்பார்த்ததுண்டு. அப்படிப்பட்ட நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுடன் கடந்த மே மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தேனிலவு
இதையடுத்து இருவரும் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு சென்றனர். அங்கு மஞ்சள் நிறத்தினாலான தாலியை கழுத்தில் வெளியே தெரியும்படி தொங்கவிட்டு போட்டோ ஷூட்டெல்லாம் எடுத்தார். இவரை பார்த்து அடுத்தடுத்து திருமணமான பிரபலங்களும் மஞ்சள் தாலியின் மகிமையை அறிந்து கொண்டனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன்
இப்படிப்பட்ட நயன்தாரா ஒரு முறை விக்னேஷ் சிவனுடன் தனது திருமணத்திற்கு வாழ்த்தியோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார், ஸ்லீவ்லெஸ் புடவையில் , கழுத்தில் தாலியுடன், நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்தார். ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தார். இப்படியாக திருமணமாகியும் மவுசுடன் இருந்த நயன்தாரா குறித்து திடீரென ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கினர்.

இரட்டை குழந்தை
அதாவது அக்டோபர் 9ஆம் தேதி "எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக" விக்னேஷ் சிவன் ஒரு பதிவு போட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். எனினும் பலர் படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்த் மாதிரி இது எப்படி என கேள்வி எழுப்பினர். அதாவது நடிகை நயன்தாராவுக்கு திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது.

6 மாத கர்ப்பிணி
திருமணத்திற்கு முன்பே இருவரும் அவசரப்பட்டிருந்தாலும் கூட திருமணத்தின் போது நயன்தாரா 6 மாத கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியும் இல்லை. வயிறு தட்டையாகத்தான் இருந்தது. அப்படியென்றால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா என்ற கேள்வி எழுந்தது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் மூலம் குழந்தை என்றால் திருமணமாகி 4 மாதங்களில் எப்படி இது சாத்தியம். வாடகைத் தாய் விதிமுறைகளின்படி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர் சான்றளித்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எதுவுமே நயன்தாரா தம்பதிக்கு பொருந்தவே இல்லை.

வெளிநாட்டு பெண்
அப்படியென்றால் வெளிநாட்டு பெண் யாரையாவது வாடகைத்தாயாக மாற்றினார்களா என்றெல்லாம் சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் வாடகைத் தாய் சட்டத்தின் விதிகளை நயன்தாரா- விக்கி மீறினரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில்தான் இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறையிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது.

மா சுப்பிரமணியன்
அந்த துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , இது குறித்து மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார். அந்த வகையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையிலான குழு நயன்தாரா விக்னேஷ் சிவனிடமும், நயன்தாரா அண்மையில் அட்மிட்டான மருத்துவமனையிலும் விசாரணையை தொடங்கியது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்
இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எந்த விதிகளையும் மீறவில்லை என தெரியவந்தது. இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத் தாய் முறை திருத்த சட்டம் அமலாவதற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செயல்பாடுகளை தொடங்கிவிட்டனர் என விசாரணையில் தெரியவந்தது. நயன்தாரா குழந்தை பெற்ற விஷயம் பிரச்சினையாகி பூதாகரமாக வெடிக்கும் என நினைத்த பலருக்கு புஸ்வானமாகி ஏமாற்றத்தை அளித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications