வெள்ள பாதிப்புக்கு ரூ.2 ஆயிரம் எப்படி போதும்? 10,400 கொடுங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது போதாது என்றும் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான 'ஃபெஞ்சல்'புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
கடலூரில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ளத்தால் விவசாய பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை வந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்பது தான் எங்களுடைய கேள்வி. சாத்தனூர் அணையை திறந்து விட்ட பிறகுதான், இந்த பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடியை திறந்து விட்டு பெரிய பாதிப்பை மாநில அரசே ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நகரமாக இருந்தாலும், கிராமங்களாக இருந்தாலும் பாதிப்பு ஒன்று தான். கிராமங்களில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட அதிக மழை பெய்ததுள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு ரேஷன் காருக்கு 2 ஆயிரம், ஒரு ரேஷன் கார்டுக்கும் 6 ஆயிரம்.. எப்படி அது நியாயம்.
எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விதிளின் படி கணக்கிட்டு பார்த்தால் ரூ.10,400 கொடுக்க வேண்டும். முதல்வர் கிராமப்புற பகுதிகளுக்கு வரவேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் வர வேண்டும். கிராமப்புற பகுதிக்கு வந்தல்தால் எந்த அளவு சேதாரம் இருக்கிறது என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
-
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!











Click it and Unblock the Notifications