அக்கவுண்ட்டில் பணம் வரலியா.. வீட்டு முன்னாடி போட்டோ எடுக்கணுமாமே.. தமிழக அரசின் அதிரடி.. விறுவிறு பணி
சென்னை: வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது தொடர்பான அறிவிப்பும் வந்துள்ளது.
உலுக்கிவிட்டு சென்ற, மிச்சாங் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்ட மக்களுக்கும் வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.

ரேஷன் கடைகள்: சம்பந்தப்பட்டவர்கள், டோக்கன் கொடுத்து, அவரவர் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.. இந்த பணிகள் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்காக சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்திருக்கிறார்கரள்.. அதாவது மொத்தமாக 5.55 லட்சம் பேர் இந்த நிதிக்காக விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது..
வருமான வரி: எனினும், இந்த லிஸ்ட்டில் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதனால்தான், தற்போது புதிதாக ஒரு செயலியை (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது.. இதில், விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.. அதன்படி, ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு நம்பர், செல்போன் நம்பர் பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் போட்டோவையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது..
விண்ணப்பம்: அதன்படி ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி தந்தவர்களை, அவர் வீட்டு அருகிலேயே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி, அவரது உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்..
இப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான், அவரவர் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட உள்ளதாம்.. அப்போது தான் விண்ணப்பித்தவர்களில் யார் யாருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications