அக்கவுண்ட்டில் பணம் வருமா?.. மகளிர் உரிமைத்தொகை + வெள்ள நிவாரணத்தொகை.. திடீர்னு ஹைகோர்ட் சொன்ன ஐடியா
சென்னை: வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பணப்பலன்கள் குறித்து, தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.
புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த 6,000 ரூபாய் நிவாரண தொகை, மக்களிடம் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கிறது...

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று அரசு தரப்பில் ஏற்கனவே, உறுதி கூறப்பட்டிருந்தது.
நிவாரண தொகை: அதன்படியே, மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
அதுபோலவே, தென்மாவட்டங்கள், இதுவரை சந்தித்திராத பேரழிவை சந்தித்து வருகிறது. மீட்பு பணிகள், நிவாரண பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
மகளிர் உரிமைத்தொகை: இதனிடையே, தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு குறித்த பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றன.. வரும் ஜனவரி மாதம் ரேஷன் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக ரூபாய் 1000 ரொக்க பணம் பொங்கல் பரிசாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது..
தைப்பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா அல்லது ரூபாய் 2000 ரொக்க பணம் வழங்கப்படுமா என்பதை முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிடுவார்" என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பரிசு: அந்தவகையில், உரிமைத்தொகை, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்றவைகளை வழங்க அரசு மும்முரமாகி வருகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம், தொடர்ந்திருந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த யோசனை தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு: அதுமட்டுமல்ல, " நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது.. இதனால் நேரமும் மிச்சமாகும்.. மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்" என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications