நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்
Recommended Video
சென்னை: நாடே இன்று தேர்தல் முடிவை எதிர்பாத்து கொண்டிருக்கும் நிலையில், நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் கருணாநிதி சமாதியில் தினமும் புதுப்புது அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் செய்யப்படுகிறது. கலை இயக்குனர் ஜே.பி.கிருஷ்ணா குழுவினர் வடிவமைத்து வருகின்றனர்.

முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை குறிக்கும் விதமாக, கருணாநிதி சமாதியில், 40க்கு 40 என, மலர் அலங்காரம் செய்திருந்தனர். தமிழகத்தில், 39 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் சேர்த்து, 40 தொகுதிகள் என, குறிப்பிட்டு இருந்தனர்.
கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை பங்கீடு செய்த திமுக மற்ற 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, வேலூரில் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன், தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. இதன் வெற்றி நிலவரம் பொறுத்தே தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்பது தெரியவரும். இதனால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications