நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. மக்கள் “இதை” செய்தால் அவ்ளோதான் - எச்சரித்த காவல்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

    Modi Chennai Visit Reasons | PM Modi Tamilnadu Visit | #TamilNadu

    இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "பிரதமர் அவர்கள் சென்னையில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022) சென்னை வருகை புரிகிறார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Flying drones in Chennai tommorrow was banned because of Prime minsiter Narendra Modis visit

    இதன் தொடர்ச்சியாக, பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளரர் சங்கர் ஜிவால் 144ன் கீழ், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (26.05.2022) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Othor Unmanned Aertal Votales) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர்." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+