யாருமே இல்லாத ரோட்ல யாருக்கு டீ ஆத்துறீங்க! வீடு வீடாக 7000 போச்சு.. வியாபாரிகளை வதைக்கும் ஆபிசர்ஸ்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரபல அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை பணம் வழங்கி வருகின்றனர். ஆனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சாலைகளின் ஓரமாக நின்று கொண்டு பூக்கடைக்காரர்களையும், காய்கறி கடைக்காரர்களையும் டார்ச்சர் செய்வதாக புகார் எழுந்திருக்கிறது.
1200 கோடி ரூபாய் வரை பொருள்கள் மதிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது அனைத்தும் வியாபாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது எனவும் அரசியல் கட்சியின் இடமிருந்து மிக சொற்ப அளவிலான பணம், பொருட்களே பறிமுதல் செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 தேர்தல் களம். கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதற்குள் 15 நாட்கள் சென்று விட்டதா என கேட்பது போல் தான் இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தல்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளன. இது ஒருபுறம் இருக்க வெற்றியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என தீவிரமாக முயன்று வருகின்றனர் வேட்பாளர்கள். இதனையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பணம் பரிசு பொருட்கள் என பட்டுவாடா களைகட்டி இருக்கிறது.
வாக்குக்கு பணம்
ஆயிரம் ரூபாய் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை கூட வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து சுறுசுறுப்பாக வீடு வீடாகச் சென்று ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் பணம் சப்ளை செய்து வருகின்றனர்.
திமுக அதிமுக
குறிப்பாக திமுக அதிமுகவினர் இதில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர். சராசரியாக ஒரு வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்தாலும் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் வாக்காளர்கள். அதே நேரத்தில் வாக்காளர்களை வீடுவீடாகச் சென்று நேரடியாகவே சந்தித்து வெளிப்படையாக பணம் வழங்கப்பட்டு வருவதாக தமிழகம் முழுவதும் வெளிப்படையாகவே புகார் சொல்லப்படுகிறது.
பறக்கும்படை அதிகாரிகள்
ஆனால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளோ இறுதி கட்ட சோதனை என்ற பெயரில் காய்கறி கடைக்காரர்களையும் பூக்கடைக்காரர்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக சொல்லப்படுகிறது. நேற்று அட்சய திருதியை நாள் என்ற நிலையில் அரை பவுன் வாங்க சென்றவர்களின் பணம் 50 ஆயிரத்து கூட ஏராளமான இடங்களில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.
பணம் பட்டுவாடா
ஆனால் விடிய விடிய பணம் பட்டுவாடா நடக்கும் நிலையில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சாதாரண வியாபாரிகளையும் பொதுமக்களையும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தொந்தரவு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தவிர்க்கத்தான். ஆனால் பணம் பட்டுவாடா செய்பவர்களை விட்டுவிட்டு 'யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்' என்பது போல் தான் பறக்கும் படையின் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications