மாஸ் வேகத்தில் வளரும் திண்டிவனம்.. வருகிறது மிகப்பெரிய நிறுவனம்.. உருவாகிறது அடுத்த டாப் சிட்டி?
சென்னை: டாபர் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில் வரவிருக்கும் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான டாபர், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவ ரூ.400 கோடி முதலீட்டைச் செய்து உள்ளது.
இது தென்னிந்தியாவில் டாபரின் முதல் உற்பத்தி ஆலை ஆகும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த நிலையில் வரவிருக்கும் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக 1884 ஆம் ஆண்டு எஸ்.கே. பர்மனால் நிறுவப்பட்ட டாபரின் மூலோபாய நடவடிக்கை மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. மெஸ்வாக் மற்றும் பபூல் பற்பசைகள், வாடிகா, ஆம்லா மற்றும் பாதாம் எண்ணெய்கள், சியாவன்ப்ராஷ், ஓடோமோஸ், ஹோனிடஸ் இருமல் சிரப், குலாபரி உட்பட பல பொருட்கள் டாபர் மூலம் தயாரியாக்கப்படுகின்றன. இவை இனி திண்டிவனத்தில் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பதற்காக சுமார் $1 பில்லியன் முதலீட்டை செய்ய Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர் Foxconn நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இது போன்ற முதல் தொழிற்சாலை இதுவாகும். அந்த நிறுவனத்தின் பல தொழிற்சாலை இந்தியாவில் இருந்தாலும், டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு டிஸ்ப்ளே மாட்யூல்கலாய் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வரும் காலங்களில் ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல் மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்படும். இத்தனை நாட்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்து இவர்கள் பயன்படுத்தினர் . இதற்கு பதிலாக இனி ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல்களை பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்த முடியும்.
சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. இதற்கான தொழிற்சாலை சென்னையில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலை அருகே கட்டப்படும். மிக விரைவில்.. கூடிய சீக்கிரம் அங்கே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இன்று தமிழக அமைச்சரவை பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன.
இதற்கான முழு லிஸ்ட் இங்கே வழங்கப்பட்டு உள்ளது: இதில் பெரிதும் வளராத அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு முதலீடுகள் குவிந்து உள்ளன. அரியலூர் போன்ற பெருமளவில் பின்தங்கிய மாவட்டத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. வியட்நாமைச் சேர்ந்த ஷூ உற்பத்தியாளர் "ஃப்ரீடிரெண்ட்" 1,000 கோடி செலவில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது . இங்கே காலணி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
Freetrend Industrial India Pvt. லிமிடெட் அரியலூர்
கிராண்ட் அட்லாண்டியா பனப்பாக்கம் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட். லிமிடெட். ராணிப்பேட்டை
கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் காஞ்சிபுரம்
அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட். லிமிடெட் கிருஷ்ணகிரி
லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட். லிமிடெட் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம்
டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் செங்கல்பட்டு
விஸ்டியன் குழுமம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர்
லூகாஸ் டிவிஎஸ் குரூப் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி
மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட். செங்கல்பட்டு, திருவண்ணாமலை
Nokia Solutions & Networks India Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
ராக்வெல் குரூப் 12 சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட். லிமிடெட். காஞ்சிபுரம்
சூப்பர் ஆட்டோ செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
Yuzhan Technology (India) Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட். ராணிப்பேட்டை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications