முதல்முறையாக திமுகவை களத்தில் எதிர்த்த விஜய்! நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்.. வெளியிட்டார் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான இன்று தமிழ்நாடு தின வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். திமுக மற்றும் தமிழக அரசு சார்பில், ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில் அதிமுக, பாஜக, நாதக வழியில் இன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துக் கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1ஆம் தேதியை தத்தமது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

vijay tamil nadu tvk

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனினும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்றே தமிழ்நாடு நாளை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay tamil nadu tvk

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூறுவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், அண்ணாவின் தீர்மானந்த்தையும் குறிப்பிட்டு, தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் எனத் தெரிவித்திருக்கிறார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+