ஒரு கப் மீல்மேக்கர் இருந்தா போதும்.. இந்த சுவையான ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணலாம்!
Food: ஒரு கப் மீல்மேக்கர் இருக்கா.. அப்போ இந்த சுவையான சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணுங்க.. தட்டுல ஒன்னு மிச்சம் இருக்காது!
ஸ்னாக்ஸ் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அதற்கு ஆகும் செலவு கொஞ்சம் அதிகம் தான். ஆகையால் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே சூப்பரான வடை செய்யலாம்.
வீட்டில் இருக்கும் மீல் மேக்கரை வைத்து சுவையான மொறு மொறு வடையை செய்ய முதலில் என்னென்ன தேவை என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புதினா - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். அதேசமயம் இன்னொரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் மீல்மேக்கரை போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து பின்னர் வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி அதிகப்படியான நீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
அடுத்து மிக்ஸியில் சோம்பு, வர மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் அதனுடன் மீல்மேக்கரை சேர்த்து கொரகொரவென அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பை கழுவி விட்டு நீர் இல்லாமல் கொர கொர என அரைத்து, ஏற்கனவே, அரைத்த மீல் மேக்கருடன் இதை சேர்க்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக கைகளில் எடுத்து உருட்டி தட்டையாக வடை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும். மாவு ஒன்று சேராமல் இருந்தால் சிறிது அரிசி மாவை அதனுடன் சேர்த்து, கலந்து வடையாக தட்டலாம்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீல்மேக்கர் வடை ரெடி.
இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறுங்கள். சுவையான மீல் மேக்கர் வடையை நீங்களும் செய்து பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications