இது என்னிக்கு வாங்கின கறி?.. இதை நீ சாப்பிடுவியா?.. அசைவ ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டு
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டு போன இறைச்சிகள் இருந்தது தெரியவந்தது.
Recommended Video
சென்னை அண்ணா நகரில் அசைவ ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு கெட்டு போன இறைச்சியால் உணவு சமைக்கப்படுவதாகவும் அதனால் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.
இதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் உள்பட அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது சமையலறைக்கு சென்று சதீஷ்குமார் பார்வையிட்டார்.

ப்ரீசர்கள்
அங்கு நிறைய ப்ரீசர்களில் இறைச்சிகள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தன. ஆட்டிறைச்சி, சிக்கன், இறால் வகைகள், மீன்கள் இருந்தன. அவற்றில் எல்லாமே கெட்டு போயிருந்தன. அதில் ஒரு பீஸை எடுத்து அங்கிருந்த ஊழியர்களிடமும் சமையல் மாஸ்டரிடமும் காட்டிய சதீஷ்குமார் இது நல்ல இறைச்சியா சொல்லுங்கள் என்றார்.

குவியல்கள்
மேலும் இப்படி குவியல் குவியலாகவா இறைச்சியை வைத்திருப்பது. இதை சாப்பிட்ட சிலர் வயிற்றுவலியால் துடிக்கிறார்கள். நீங்கள் இங்கே மொத்த இறைச்சியையும் கெட்டு போனதாகவே வைத்துள்ளீர்கள். இந்த இறைச்சியை பாருங்கள் எப்படி இருக்கிறது என காண்பித்தார் (அதை பார்ப்பதற்கு அழுகியிருந்தது நன்றாகவே தெரிந்தது.) உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு இறைச்சியை அன்றாடம் வாங்க மாட்டீர்களா

இதெல்லாம் நீ சாப்பிடுவியா
இந்த இறைச்சியை நீ சாப்பிடுவியாய்யா என கேட்டார். எல்லாம் எப்போது வாங்கியது என கேட்டதற்கு அங்கிருந்த ஊழியர், நேற்றுதான் சார் வாங்கியது என்றார். "பொய் சொல்லாதே. நேற்று வாங்கிய இறைச்சி இப்படியா இருக்கும். எதை கேட்டாலும் நேற்று வாங்கியதுனு சொல்றே என கேட்டார். மேலும் அங்கு ஒரு கிரேவி இருந்தது. அது என்னவென கேட்டதற்கு தெரியவில்லை" என்றார் ஊழியர். பின்னர் அந்த கிரேவியின் பாத்திரத்தை மூட பார்க்கவே குமிட்டிக் கொண்டு வரும் அளவுக்கு அசிங்கமாக ஒரு தட்டு இருந்தது.

பாத்திரம் மூடி
அதை பார்த்த சதீஷ்குமார், இதெல்லாம் ஒரு மூடியா, சாப்பிடும் பொருளை மூடும் பாத்திரத்தின் மூடியை இப்படியா அழுக்காக வைத்திருப்பது என கேட்டார். பின்னர்
ஹோட்டலை இனி நடத்தக்கூடாது.மேலும் ஹோட்டல் திரும்பத் திறக்க வேண்டும் என்றால் அனைத்து பொருட்களையும் மாற்றி விட்டு முறையாக அனுமதி பெற்றால் மட்டுமே ஹோட்டலை திறக்க அனுமதிப்பேன் என தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications