பேய் அறைந்தார் போல் கிடந்த பெட்டி கடைக்காரர்! லுங்கியில் குட்கா குடோன்! அதிகாரிகள் ஷாக்
சென்னை: சென்னை திநகரில் ஒரு பெட்டி கடையில் உணவுத் துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டின் போது கடைக்காரரின் லுங்கியில் ஒரு குட்கா குடோனே இருந்ததை அடுத்து அந்த கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.
சென்னை திநகரில் உள்ள ஒரு கடைக்கு உணவுத் துறை அதிகாரிகள் பெட்டிக் கடை ஒன்றில் குட்கா விற்பதாக வந்த தகவலை அடுத்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அந்த கடையில் பால் பாக்கெட், மாவு பாக்கெட், மசாலா ஐட்டங்கள், சிறிய அளவில் மளிகை சாமான்கள் உள்ளிட்டவைகள் இருந்தன. அந்த கடையில் சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களும் இருந்தன. ஆனால் இவர்கள் தேடி வந்த குட்காவை மட்டும் காணவில்லை.
ரகசிய தகவல் கொடுத்தவர்கள் தவறாக கூறிவிட்டனரா என உணவு துறை அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடையில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டும் பார்த்தனர். ஒரு வேளை பொருட்களுக்கு பின்னால் வைத்திருக்கிறார்களா என்றும் சோதனை செய்து பார்த்தாகிவிட்டது.
ஆனாலும் கிடைக்கவில்லை. இதனால் கடையை விட்டு செல்லலாம் என அதிகாரிகள் புறப்பட்டனர். குட்கா கடையில் தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் கடைக்காரர் முகம் பார்த்தால் பேய் அறைந்த மாதிரியே இருந்தது. இதனால் ஏதோ தவறு இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர்.
உடனே அவரது லுங்கியில் சந்தேகம் வந்தது. இதனால் மடித்து கட்டிய லுங்கியை கீழே தொங்கவிடச் சொன்னார்கள். அப்போது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். குட்கா, மாவா பொட்டலங்கள் எல்லாம் மடமடவென கீழே கொட்டியது. பிறகு அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள். கடையில் இருக்கும் பால் பாக்கெட்டுகளையும் பணத்தையும், மாவு பாக்கெட்டுகளையும் எடுத்துக் கொள்ளுமாறு உரிமையாளரிடம் கூறினர்.
குட்கா விற்பனை செய்வது தவறு. அதனால் உங்கள் கடைக்கு சீல் வைக்க வேண்டும் என்றனர். இதனால் கடைக்காரர் வேண்டாம் சார் என கெஞ்சினார். ஆனால் அதிகாரிகள் கேட்கவில்லை. கடையில் இருக்கும் கெட்டு போகும் பொருட்களையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு கடையை பூட்டுங்கள் என கூறிவிட்டார்.
அது போல் சைதாப்பேட்டையிலும் ஒரு கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமுல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2025-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்குககளை விசாரித்த உயர் நீதிமன்றம், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications