சென்னை உட்பட மொத்தம் 13 மாவட்டங்கள்! அடுத்த சில மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கு! வானிலை மையம் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இப்போது தொடங்கி உள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்தது. அப்போது முதலே வடதமிழக மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது.
இந்தாண்டு மழை வழக்கமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ள நிலையில், மாநிலத்தில் பெய்யும் மழையால் மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

ஏமாற்றம்
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் கூட வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருந்தது. இதனால் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறி இருந்தது. இருப்பினும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்ததால், கரையைக் கடப்பதற்குள் வலுவிழந்தது. இதனால் மாநிலத்தில் எந்த இடத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

மழை
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவ. 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

13 மாவட்டங்கள்
இதற்கிடையே 13 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, மேலூர், மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் பெரியளவில் மழை பெய்யவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் 30மிமீ மழையும், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 20 மிமீ மழையும் பெய்து உள்ளது. இப்போது கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் புதிதாக எதுவும் ஏற்படவில்லை என்பதால் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications