மெட்ரோ வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. உலகிலேயே முதல்முறை.. சென்னையில் சுவாரசியம்
சென்னை: சென்னை மெட்ரோ 2.0 கட்டுமானத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லியில் ஒரே தூணில் 5 டிராக் கட்டும் வினோதம் நடந்து வருகிறது. ஒரே தூணில் 5 ரயில்கள் ஒரே நேரத்தில் செல்லும் விதமாக டிராக் அமைக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே எந்த நாட்டிலும் இந்த டிராக் வசதி இல்லை. சென்னையில்தான் முதல்முறையாக ஒரே தூணில் 5 டிராக் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ₹61,843 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகளுக்காக பூந்தமல்லி டிப்போவில் சோதனைப் பாதையை சென்னை மெட்ரோ ரயில் அமைக்கத் தொடங்கியுள்ளது. கற்கள் கொண்ட சோதனை பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அமைப்பில், கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு நெட்வொர்க் ஆகிய இரண்டிலும், அதிகாரிகள் பேலஸ்ட்லெஸ் பாதையை அமைக்கவில்லை. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் அமைப்பில் "பேலஸ்டிக் டிராக்" (தண்டவாளங்களுக்கு இடையில் சிறிய நொறுக்கப்பட்ட கற்கள்) போடப்படுவது இதுவே முதல் முறை.
இரண்டாம் கட்ட திட்டத்தின் 116-கிமீ நெட்வொர்க்கில், பூந்தமல்லியில் உள்ள இந்த டிப்போவைத் தவிர, மற்ற டிராக் எதிலும் இந்த கற்கள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை முயற்சியாக இந்த கற்கள் அமைக்கப்பட்டு புதிய விதமான டிராக் அமைக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த பூந்தமல்லி டிப்போ இருக்கும். ஸ்டேபிளிங் லைன், பழுதுபார்ப்பு மற்றும் சோதனைகள் போன்றவற்றை செய்ய இந்த டிப்போ முக்கியம் ஆகும். இங்கேதான் ரயில்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் பராமரிப்பு மற்றும் பிற பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும். . 225 கோடி செலவில் கட்டப்படும் இந்த டிப்போ, பூந்தமல்லி மற்றும் லைட் ஹவுஸ் (காரிடார் 4) இடையே இயக்கப்படும் ரயில்களை பராமரிப்பதற்கு உதவும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
டிப்போ உள்ளே மட்டும்: டிப்போ உள்ளே மட்டும் கற்கள் கொண்ட இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் . இந்த டிப்போவில் ஸ்டேபிளிங் லைன்கள், இன்ஸ்பெக்ஷன் மற்றும் ரிப்பேர் லைன்கள் மற்றும் உட்பட மொத்தம் 24 லைன்கள் இருக்கும். இதில், 13 வழித்தடங்கள் டிப்போவிற்குள்ளும், மீதமுள்ளவை, டிப்போவிற்கு வெளியே கற்கள் இல்லாமல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2ம் கட்ட மெட்ரோ: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் (கோயம்பேடு முதல் ஆவடி வரை) மற்றும் வழித்தடம் 3-ல் (சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மற்றும் வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான .மு.அ.சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (20.09.2023) சமர்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான கட்டம் 2-இன் நீட்டிப்பு: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் ரூ.6376.18 கோடி மதிப்பீட்டில் (தோராயமாக) மெட்ரோ இரயிலை நீட்டிபதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிக்கப்பட்டு மெட்ரோ இரயிலை பரிந்துரைக்கிறது.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நில இருப்பு மற்றும் பட்டாபிராமத்தில் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆவடி முதல் பட்டாபிராம் வரையிலான விரிவாக்கத்தை விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் ஆராயலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பரிந்துரைத்ததுள்ளது. விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த மெட்ரோ இரயில் நிலையங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications