3 மாசம் ‘கேக்’தான் சாப்பாடு! மாதவன் செய்த விஷபரீட்சை! அப்ளைடு கினீசியாலஜி பற்றி தெரியுமா?
சென்னை: ராக்கெட்ரி திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மாதவன் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடாமலே தனது உடல் எடையை அப்ளைடு கினீசியாலஜி என்ற முறையைப் பயன்படுத்தி அதிகரித்தது எப்படி என்பது பற்றி இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
ராக்கெட்ரிக்காக எவ்வளவு விரைவாக உடல் எடையைக் கூட்டிக் குறைத்தேன் என்பதை நினைவு கூர்ந்தார் மாதவன்: 'மூன்று மாதங்களாக நான் கேக் மட்டுமே சாப்பிட்டேன்...'

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இது கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். இதில் நடித்த மாதவன், படத்தையும் அவரே இயக்கியிருந்தார்.
சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பரவலாகக் கவனத்தைப் பெற்றிருந்தது. விஞ்ஞானி நம்பியின் கதாபாத்திரம் வயதான தோற்றம் கொண்டது. அதற்காகத் தனது உடல் தோற்றத்தையும் எடையையும் மாற்ற வேண்டிய தேவை மாதவனுக்கு உருவானது.
எனவே அவர் ஒரே படத்தில் தனது உடல் எடையைக் கூட்டவும் குறைக்கவும் வேண்டி இருந்தது. அந்த சவாலான காரியத்தை எப்படிச் செய்தேன் என்பதை இப்போது மாதவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்துப் பேசிய மாதவன், "எடையை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் அதை விரைவாகக் குறைப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க நான் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தேன். இந்த ஆராய்ச்சி என்னை அப்ளைடு கினீசியாலஜி எனப்படும் சோதனைக்கு அழைத்துச் சென்றது.
நமது மாநிலம் உணர்வுகள் சாந்தது. ஒருவருக்குப் பிடிக்கும் உணவு அதேநேரத்தில் மற்றவருக்குப் பிடிக்காது. உணர்வு ரீதியாக ஒருசிலர் அந்த உணவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உடல் எடையைக் கூட்டுவதற்காக மூன்று மாதங்கள் வரை நான் கேக் மட்டுமே சாப்பிட்டேன். நான் சகிப்புத்தன்மை இல்லாமல் சாப்பிட்டேன். எனவே, முழு உடலும் ஒரு வகையாக ஊதியது. என்னால் குனிந்து எனது ஷூ லேஸைக் கட்டுவது கஷ்டமா இருந்தது.
ஆனால் அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, நான் எனது உடலுக்குத் தேவையான நல்ல உணவை மட்டுமே எடுத்துக் கொண்டேன். அதற்காக உடற்பயிற்சி செய்யவில்லை. ஓடக்கூட இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் மருந்தும் கூட எடுக்கவே இல்லை" என்று கூறியுள்ளார் மாதவன்.
அது என்ன அப்ளைடு கினீசியாலஜி? : அப்ளைடு கினீசியாலஜி என்பது தசை பயிற்சி எனப்படும். இது ஒரு வகையான மருத்துவ நடைமுறையாகும், இதில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும். அதற்காகத் தசை வலிமை சோதிக்கப்படும்.
"நாம் பலரும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்கிறோம். உணவு என்பது ஒவ்வொரு நபருக்கு வெவ்வேறு விதமான விளைவுகளைத் தரும். ஆகவே உணர்ச்சி ரீதியாக உணவு மீது ஒரு நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால், உங்களுக்கு ஒத்துக் கொள்ளக் கூட உணவு எது? உடல் எதைச் சகித்துக் கொள்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவு சோதனைக்குத்தான் அப்ளைடு கினீசியாலஜி என்கிறோம்.
இது நியூட்டனின் இயக்க விதியைப் போன்றது, 'ஒவ்வொரு எதிர்வினைக்கும் சமமான எதிர் எதிர்வினை உள்ளது'. உடற்பயிற்சி செய்து உடலைக் குறைப்பது, கடினமான பயிற்சிகளை மேற்கொள்வது போன்று எந்தச் செயலையும் செய்யாமல் சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கவும் அல்லது அதிகரிக்கவும் அப்ளைடு கினீசியாலஜி மிகச் சிறப்பாக உதவும் என்று சிலர் நம்புகிறார்கள்.

உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம், செரிமானம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய அடிப்படை பிரச்சனைகளைக் கண்டறிந்து எடையைப் பராமரிக்க இது உதவுகிறது" என்று இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பேசிய மனநல மருத்துவர் ஆனந்த் கூறியுள்ளார்.
இந்தச் சோதனை மூலம் தசை வலிமை எப்படி உள்ளது? ஏதேனும் உணவு ஒவ்வாமை உள்ளதா? , ஹார்மோன் சமநிலையின்மை எவ்வாறு உள்ளது? ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதா? எனப் பலவற்றையும் கண்டுபிடிக்கலாம். மேலும், "உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, அடிப்படை சுகாதார நிலை ஆகிய காரணிகளைப் பொறுத்து உடல் எடையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது மாறுபடும்" என்கிறார் இந்த டாக்டர்.












Click it and Unblock the Notifications