ரெடியாகும் மத்திய பட்ஜெட்.. எந்தெந்த பொருட்களின் விலை உயரும்.. விலைவாசி மாற்றம் எப்படி இருக்கும்?
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு பின் பல்வேறு பொருட்களின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்படுகிறது. இது தலைமை பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்படுகிறது.

இதில் இந்தியாவின் பணவீக்கம் மற்றும் உற்பத்தி பற்றிய விவகாரங்கள் அடங்கி இருக்கும். இதன் அடிப்படையில் பொருட்களின் விலை உயர்வை கணக்கிட முடியும். பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு பின் பல்வேறு பொருட்களின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது இந்தியாவில் பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும் , ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது வழங்கும்.
பொருளாதார ஆய்வு ஆவணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?: பொருளாதார ஆய்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆவணத்தின் முதல் பகுதியில் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இது பொருளாதாரம் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பாய்வையும் வழங்கும். இரண்டாம் பாகம் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம், ஜிடிபி ஆகியவை பற்றிய விவரங்களை கொண்டு இருக்கும்.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
1. தங்கத்தின் விலை மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
2. காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
3. வாகனங்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்களின் விலை உயரலாம்.
4. மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரலாம்.
உணவு பொருட்கள்: கடந்த வருடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (சிஎஃப்பிஐ) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
கடந்த இரண்டு ஆண்டுகளில் 97 சதவீத உயர்வை உணவு பொருட்கள் சந்தித்து உள்ளன. .
வெப்ப அலைகள், சீரற்ற பருவமழை விநியோகம், பருவகால மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை,மற்றும் வறண்ட நிலை - காலநிலை மாற்றத்தால் உணவு விலைகள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூலை 2023 இல் தக்காளி விலை அதிகரித்தது, பருவகால மாற்றங்கள், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பயிர் நோய்கள் மற்றும் நாட்டின் வடக்குப் பகுதியில் பருவ மழையின் தாமதம் ஆகியவை தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர முக்கிய காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த அறுவடை காலத்தில் பெய்த மழை, வெங்காயத்தின் தரத்தை பாதித்தது. இது வெங்காயம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆனது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாத காரணத்தால், பருப்பு வகைகள், குறிப்பாக துவரம் பருப்பு விலை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. இதன் உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications