மின் கட்டண மாற்றம்.. யாருக்கெல்லாம் இ.பி பில் உயரப்போகிறது? இந்த 10 பாயிண்ட்ஸ்களை படிங்க!
சென்னை: தமிழ்நாட்டில் செய்யப்பட்ட மின்கட்டண மாற்றம் காரணமாக நீங்கள் இரண்டு மாதம் ஒருமுறை செலுத்தும் கட்டணம் வெகுவாக மாற்றம் அடைய உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவும், மத்திய மின் வாரியத்துறை தொடர்ந்து கடிதம் அனுப்பியதால், மின் மானியத்தை தடுத்து விடுவோம் என்று கூறியதால், கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த மின் கட்டணம் மாற்றம் காரணமாக, நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று பார்க்கலாம்.

மின்கட்டண மாற்றம்
1) 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று செந்தில் பாலாஜி தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 1 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் இருக்காது. 42 விழுக்காடு மின் இணைப்புதாரர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2) குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். அதேபோல் குடிசை தொழில், கைத்தறி, வழிபாட்டு தலங்களுக்கான சலுகை கட்டணம் தொடரும்.

எவ்வளவு
3) 100- 200 யூனிட்டுகளுக்கு இடையில் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 63.35 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
4) 200- 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 36.25 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
5) 300- 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 18.82 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை கூடும்
6) 400- 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 10.56 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
7) 500- 600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 3.14 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
8) 600- 700 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1.96 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் எவ்வளவு?
9) 700- 800 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1.26 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
10) 800- 900 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.565 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 0.86 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 900 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1.96 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications