விருப்பத்துடன் பழகியுள்ளனர்..எப்.ஐ.ஆர்.ஐ மாற்றுங்க.. மணிகண்டன் வழக்கில் போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி!
சென்னை: அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Recommended Video
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

துணை நடிகை புகார்
தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் துணை நடிகை சாந்தினி.
பகீர் புகார் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பெங்களுருவில் கைது
இதனை அடுத்து மணிகண்டனின் உதவியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மணிகண்டன் தலைமறைவானார். சுமார் 2 நாட்களாக மணிகண்டனை தேடி வந்த போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வைத்து இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பாலியல் வன்கொடுமை பிரிவை மாற்றவும்
இதன் பின்னர் மணிகண்டனை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மணிகண்டனை ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மணிகண்டன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற வழக்கின் பிரிவை மட்டும் மாற்றும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

விருப்பத்துடன் பழகியுள்ளனர்
இருவரும் விருப்பத்துடன் பழகியுள்ளனர். எனவே இதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மணிகண்டன் மீது மீது மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒன்றுதான் பாலியல் வன்கொடுமை என்ற பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications