நேரா ‘வார் ரூம்’ தான்.. முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்திற்கு திமுகவில் பொறுப்பு!
சென்னை: அண்மையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், லோக்சபா தேர்தலுக்கான திமுக வார் ரூம் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 1989 முதல் 1991 வரை திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர் ஆர்.சண்முகசுந்தரம். 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் 2002 முதல் 2008 வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இரண்டரை ஆண்டுகளாக அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஆர்.சண்முக சுந்தரம், கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. தனது ராஜினாமா குறித்த முடிவை தமிழ்நாடு அரசிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் சண்முகசுந்தரம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அரசு பொறுப்பில் இருந்து விலகி தனிப்பட்ட முறையில் தனது வழக்கறிஞர் பணியை ஆர்.சண்முக சுந்தரம் தொடர உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமிக்கப்பட்டார்.
திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் ஆர்.சண்முகசுந்தரம். கடந்த 1995ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி நில அபகரிப்பு வழக்கை தொடர்ந்தவர் சண்முகசுந்தரம் தான். இந்த வழக்கை தொடர்ந்ததற்காக வெல்டிங் குமார் மற்றும் ரவுடிகளால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி உயிர் தப்பினார் சண்முகசுந்தரம். திமுக தலைவர் ஸ்டாலினின் அபிமானம் பெற்ற ஆர்.சண்முகசுந்தரம் திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திமுக அமைத்துள்ள லோக்சபா தேர்தல் வார் ரூமில் ஆர்.சண்முகசுந்தரத்திற்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆர்.சண்முக சுந்தரம், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடன் நல்ல இணக்கமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் பணியில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. அந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார். ஊடக விவாதக் குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும்.
சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும், தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேளும், தேர்தல் வழக்குகளை எதிர்கொள்வதற்கான நீதிமன்றக் குழுவில் முக்கிய வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி ஆகியோர் தேர்தல் வழக்குகளை எதிர்கொள்வதற்கான நீதிமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
-
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா?












Click it and Unblock the Notifications