அரசியல் வாதியல்ல..வியாதி! ‘இதை’ நிரூபித்தால் அரசியலை விட்டே போறேன்..பாஜகவுக்கு ஜெயக்குமார் சவால்..!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மதவெறி பிடித்தவர் அல்ல.. அவர் கரசேவைக்கு ஆள் அனுப்பினார் என்பதை தமிழிசை சவுந்திரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து பேசியது தற்போது அதிமுகவினரை கொந்தளிப்பு அடைய செய்திருக்கிறது. ஜெயலலிதா இந்துத்துவா கொள்கை உடையவர் என அண்ணாமலை பேசியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஆனால் தனது கருத்தில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, அதிமுகவினரை விவாதத்துக்கு அழைத்துள்ளார்.
ஜெயக்குமார்: இந்நிலையில் கரசேவைக்கு ஆள் அனுப்பினார் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி மத இன மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஜெயலலிதா: தனது ஆட்சிக் காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் இணக்கத்துடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. அண்ணாமலையின் கட்சியில் தலைவர்களே இல்லையா? அத்வானி குறித்தும், வாஜ்பாய் குறித்தும் ஏன் அவர் பேசுவதில்லை? பாஜக மாநிலதலைவரான அண்ணாமலை எதற்கும் லாயக்கில்லாதவர் மெச்சூரிட்டி இல்லாதவர் இம் மெச்சூரிட்டி நபர். பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலை தான்.
பி டீம்: அண்ணாமலை திமுகவின் 'பி' டீம். தமிழ்நாட்டில் இருக்கும் மின்வெட்டு பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து அவர் வாய் திறப்பதில்லை. ஆனால் அவருடைய ஒரே நோக்கம் ஜெயலலிதா குறித்து பேசுவதுதான். ஜெயலலிதாவை பொறுத்தவரை தெய்வபக்தி கொண்டவர்தான். அதிமுக தலைவர்களே அதை பேசினார்கள் என்று கூறுவது பொறுப்பெற்ற முறையில் பேசுவது முகம் சுளிக்க வகையில் இருக்கிறது. ஜெயலலிதா கரசேவைக்கு ஆள் அனுப்பினார் என்பதை தமிழிசை சவுந்திரராஜன் நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயார். ஆனால் மதவெறி பிடித்தவர் அல்ல.
கூட்டுச் சதி: ஸ்டாலினும் அண்ணாமலையும் சேர்ந்து செய்கின்ற கூட்டுச்சதி இது. அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி. அரசியல் வாதியல்ல.. அரசியல் வியாதில்.. பிஜேபி மக்களை ஏமாற்றியுள்ளது. ஒரு அரசியல் வியாபாரி அறவேக்காடு இவர்களோடு நாங்கள் சென்று விவாதம் செய்ய வேண்டுமா அரசியல்வாதியோடு விவாதிக்கலாம் அரசியல் வியாபாரி விவாதிக்க தயாராக இல்லை.
நிறுத்திக் கொள்ள வேண்டும்: தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை சிறு வயது குழந்தையாக சவலை குழந்தையாக பார்க்கிறோம்.. இதோடு அவர் தன்னுடைய கருத்துகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சமூகநீதி காத்த வீராங்கனையை மதவெறி பிடித்தவர் போல சித்தரிக்க முயல்வது திமுக - பாஜகவின் கூட்டுச்சதி" என மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications