விஷயம் தெரியுமா.. இந்த பட்ஜெட்டில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கு.. மாஃபா பாண்டியராஜன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த பட்ஜெட்டில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் பேசும் போது, அறிவிப்புகள் நிறைய வந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய வந்துள்ளது. இது திமுக அரசின் மூன்றாவது பட்ஜெட். முதல் இரண்டு பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வந்த நிலையில், அவை நிறைவேற்றப்படவில்லை. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஆயிரம் தடுப்பணைகள் உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். இதுவரைக்கும் எத்தனை தடுப்பணைகளை உருவாக்கி உள்ளார்கள். எந்த தடுப்பணையும் கட்டப்பட்டதாக தெரியவில்லை. இதுவரைக்கும் எந்த அமைச்சரும் தடுப்பணையை திறந்து வைத்ததாக எங்களுக்கு தெரியவில்லை. நான் அறிந்தவரையில் தடுப்பணைகள் ஒன்று கூட முடிக்கப்படவில்லை என்றார்.

சராசரி பட்ஜெட்

சராசரி பட்ஜெட்

அப்போது குறுக்கிட்ட நெறியாளர், ஒரு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்த பட்ஜெட்டில் முடிக்க வேண்டும் என்று இருக்கிறதா? அல்லது ஆட்சி காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மாஃபா பாண்டியராஜன் தடுப்பணைகள் வேகமாக முடிக்கக்கூடிய விஷயம் தான். ஒரு தடுப்பணைக்கு சராசரி பட்ஜெட் ஒரு கோடி முதல் 1.15 கோடி வரை தான் ஆகும். பெரிய தடுப்பணைகளுக்கு கூடுதலாக செலவாகும். ஆனால் அவர்கள் அறிவித்தது சிறிய தடுப்பணைகள் தான்.

ஆளூர் ஷா நவாஸ்

ஆளூர் ஷா நவாஸ்

ஆனால் நிறைவேற்றப்படவில்லை. பல விஷயங்கள் துவங்கப்படவே இல்லை என்பது உண்மை. அதேபோல் யார் என்ன கோரிக்கை வைத்தாலும் நிதியமைச்சர் கவனமாக பரிசீலித்து நிறைவேற்றுவதாக ஆளூர் ஷாநவாஸ் கூறினார். நான் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். சிப்கார்டை பாருங்கள்.

30 சதவீதம் காலி

30 சதவீதம் காலி

தமிழகம் முழுவதும் சிப்கார்ட்கள் (தொழிற்பேட்டைகள்) உள்ளன. தற்போது புதிதாக3 சிப்கார்ட்டுகள் அறிவித்துள்ளார்கள். ஆனால் இந்த சிப்கார்ட்டுகளில் 30 சதவீதம் காலியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தவறான கொள்கைகளின் காரணமாக பல சிப்கார்ட்கள் மூடிக்கிடக்கின்றன என்றார்.

தொழில் முனைவோர்கள்

தொழில் முனைவோர்கள்

அப்போது நெறியாளர், கொரோனாவின் தொடர்ச்சியா அல்லது திமுக ஆட்சி தான் காரணம் என்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மாஃபா பண்டியராஜன்,கொரோனாவும் ஒரு காரணம் தான். ஆனால் திமுக ஆட்சியில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது முக்கியமான காரணம். 30 சதவீதம் தொழில் முனைவோர் கடனை கட்ட முடியாமல் நொடிந்து போய் கிடக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு புதிய தொழில் நிறுவனங்களுக்கு அந்த இடத்தை கொடுங்கள் என்றார்கள். அதாவது எதுவும் கட்ட வேண்டியதில்லை என்று சிறுகுறு தொழிலாளர்களுக்கு அறிவித்தால் சிறப்பாக இருக்கும்" இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+