எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. அதிமுகவில் இருந்து மேலும் ஒரு விக்கெட்.. தட்டி தூக்கிய தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையன், குப கிருஷ்ணன் வரிசையில் அடுத்ததாக அதிமுக முன்னள் அமைச்சர் ந சுப்பிரமணியன் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். நேற்று இரவு ந சுப்பிரமணியன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். 2011-2016 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ந சுப்பிரமணியன்.

புதுக்கோட்டையை சேர்ந்த ந சுப்பிரமணியன் கடந்த 2011 ஆம் ஆண்டு கந்தர்வக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

Former AIADMK Minister N Subramanian Joins Vijay TVK

தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகிறது. திமுக - காங்கிரஸ், அதிமுக - பாஜக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என தற்போதைக்கு 4 முனை போட்டி உள்ளது.

கட்சி தாவும் முன்னாள் அமைச்சர்கள்

தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் கூட முழுமையாக இல்லை என்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமான கட்சி பணிகளை செய்து வருகின்றன. இதேபோல் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுக, அதிமுக, தவெக என கட்சி தாவி வருகிறார்கள். அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய ஓ பன்னீர் செல்வம் இன்னும் எந்த பக்கம் என்பதை முடிவு செய்யாமல் உள்ளார்.

இதனால் அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். இதேபோன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக பக்கம் சேர்ந்தார். அப்போது அவர் மேலும் பல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என கூறினார்.

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்

ஆனால் அதன் பிறகு யாரும் தவெகவில் இணையவில்லை. இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான கு.ப கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். கடந்த 1991 முதல் 1996 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்த இவர் விஜய் கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ மனோகர் தவெகவில் இணைந்தார்.

சென்னையில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த மனோகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் சொந்த அண்ணன் தான் மனோகர். இதனால் ஒரே கல்லில் அதிமுக - பாஜகவுக்கு தவெக ஷாக் கொடுத்திருந்தது. இந்த நிலையில் அதிமுகவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ந சுப்பிரமணியனை தவெக தட்டி தூக்கியுள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்

சென்னையில் நேற்று இரவு விஜய்யை சந்தித்த ந சுப்பிரமணியன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். புதுக்கோட்டையை சேர்ந்த ந சுப்பிரமணியன் கடந்த 2011 ஆம் ஆண்டு கந்தர்வக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

செங்கோட்டையன், கு.ப கிருஷ்ணன், ஏ மனோகர் வரிசையில் அடுத்ததாக அதிமுக முன்னள் அமைச்சர் ந சுப்பிரமணியன் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இதேபோன்று சசிகலாவும் புது கட்சியை ஆர்ம்பித்து விஜய்யுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+