நரம்பியல் தொந்தரவு.. அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் தேர்தல் வியூகங்கள் போன்றவை குறித்தெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

முதல்கட்ட ஆலோசனை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், நேற்று ஜூலை 30ம் தேதியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்றிருந்தார்.. கூட்டம் நடந்து கொண்டேயிருக்கும்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டத்திலிருந்து முன்கூட்டியே கிளம்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. எனவே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலையை அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.
பெரியசாமி: இதனிடையே, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது.
இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications