எம்ஜிஆரே எனக்கு பொண்ணு தர்றேனு சொன்னாரு.. விஜயை பார்த்ததும் வந்த ஃபிலிங்! உடைத்த ஜேசிடி பிரபாகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் மீண்டும் ஒரு எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி இணைந்திருக்கிறார். அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் பிரபாகருக்கே தந்திருப்பேன் என எம்.ஜி.ஆரே சொன்னதாகவும், விஜய்யை பார்த்தபோது எம்ஜிஆரை பார்த்த மகிழ்ச்சி தனக்கு ஏற்பட்டதாக கூறி இருக்கிறார் ஜேசிபி பிரபாகர்.

தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றி கழகம், கடந்த சில மாதங்களாகவே கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக, பழுத்த அரசியல்வாதிகள் அந்த கட்சியில் இல்லாததால் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கூட வலுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

பல கட்சிகளில் இருந்து ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் வந்தாலும் திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும் அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

JCD Prabhakar Vijay TVK

ஜேசிடி பிரபாகர் தவெக

மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் கட்சிக்கு வருவார்கள் என அவர் கூறியிருக்கும் நிலையில் அதிமுக புள்ளிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவ தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான ஜேசிடி பிரபாகரன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் நேற்று இணைந்திருக்கிறார். 2011 வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பல எம்எல்ஏ எம்பி தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆரின் நம்பிக்கைகுரிய சீடர்களில் ஜேசிடி பிரபாகரன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் சீடர்

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய ஜேசிடி பிரபாகர்," எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. ஒரு சாதாரண தொண்டனாகவோ அல்லது நிர்வாகியாகவோ எனது பணியை தொடர்வேன். அதே நேரத்தில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை நிச்சயம் முடித்துக் காட்டுவேன். ஒரு நல்ல கைகளில் ஆட்சி செல்ல வேண்டும் என மக்கள் கனவை தளபதி விஜய் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எம்ஜிஆரின் சீடரான எனக்கு எம்ஜிஆரை முதன்முறை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி விஜய்யை பார்த்த போதும் ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ

அதிமுக ஒன்று சேர வேண்டும் என நான் பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் முயன்றோம். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஓட்டினோம். ஆனால் அது கைகூடவில்லை தலைவர்கள் தெருவில் நிற்கலாம். ஆனால் தொண்டர்கள் தெருவில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த முயற்சி எடுத்தோம். அது நடந்தேறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

விஜய் எம்ஜிஆர்

எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் பிரபாகருக்கே கொடுத்திருப்பேன் என எம்ஜிஆர் கூறியிருந்தார். அந்த அளவுக்கு அவர் என் மீது அன்பும் பாசமும் வைத்திருந்தார். நானும் அவர் மீது அளவுக்கு அதிகமாக மரியாதையும் பாசமும் வைத்திருந்தேன். ஆனால் அவர் வளர்த்தெடுத்த அதிமுக தற்போது அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+