அன்வர் ராஜாவை தொடர்ந்து அடுத்த முக்கிய புள்ளி.. திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ
சென்னை: புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். அதிமுக கட்சி போகின்ற போக்கே சரியில்லை என்றும், அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றும் கார்த்திக் தொண்டைமான் பேட்டியளித்தார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் இன்று திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

திமுகவில் கார்த்திக் தொண்டைமான்
"அதிமுக கட்சி போகின்ற போக்கே சரியில்லை என்றும், அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்பதாலும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக கார்த்திக் தொண்டைமான் கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
அதிமுகவின் செயல்பாடுகள் சரியில்லை
தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதல்வர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் நன்றாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட கழகத்தில் இணைந்து நிச்சயமாக செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் தொண்டைமான், அதிமுக மதவாத சக்தி கட்சிகளுக்கு உறுதுணையாக போகிறார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அவர்களது செயல்பாடுகள் சரியில்லை. கட்சி போகின்ற போக்கே சரியில்லை. இதனால் தான் திமுகவில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
அன்வர் ராஜாவை அடுத்து
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவின் உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா திமுகவில் ஐக்கியமான நிலையில் தற்போது புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் திமுகவில் இணைந்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications