பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு! 16 மணி நேர சோதனையில் அதிரடி
சென்னை: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவருடன் சேர்த்து 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்திய நிலையில் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
கடலூரை சேர்ந்த சத்யா பன்னீர் செல்வம் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த இரு தினங்களுக்கு முன்பு 16 மணி நேர சோதனையை நடத்தியது.

அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை, சத்யா உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர் ரூ 9.79 கோடி சொத்துக்களை தனது கணவர், மகன் உள்ளிட்டோர் பெயரில் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அது போல் இவர் தனது வருமானத்தை விட 571.30 சதவீதம், சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
கடலூரை சேர்ந்த சத்யா பன்னீர் செல்வம் மாநில அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தார்.
இவருடைய கணவர் பன்னீர் செல்வம், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சத்யா, அதிமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சத்யாவும் அவருடைய கணவர் பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்திற்கு மனு அளித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சத்யா, பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்த்து உத்தரவிட்டார். அப்போதுதான் சத்யாவுக்கு அதிமுக மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 12 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பண்ருட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சத்யா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவான சத்யா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது புதிய வழக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் கடலூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த 18 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சத்யாவின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அதிரடியாக 16 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் அறிந்ததும் சத்யா வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சத்யா கணவர் பன்னீர் செல்வம் மீது ஏற்கெனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போதும் சத்யா வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications