நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியர்.. அதிமுக தீவிர விசுவாசி.. மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்
சென்னை: நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருந்த மருது அழகுராஜ் பிறகு தவெகவிற்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால் மருது அழகுராஜ் விஜய் கட்சியில் இணைவார் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு அதிமுகவை கைப்பற்ற சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற ஒன்றையும் ஓ பன்னீர் செல்வம் நடத்தி வரும் நிலையில், ஓ பன்னீர் செல்வம் அணியில் முக்கிய பிரமுகராக விளங்கி வந்த மருது அழகுராஜ், அதிருப்தி காரணமாக விலகியிருந்தார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக மருது அழகுராஜ் பதிவிட்டு வந்தார். இதனால், அவர் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மருது அழகுராஜ் தவெகவில் சேரவில்லை. அதிமுகவில் எடப்பாடி தலைமையை கடுமையாக விமர்சித்தும் விஜய் மீது அனுசரணையாகவும் வலைத்தலத்தில் மருது அழகுராஜ், அடுத்து தவெகவில் இணைவார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளருமான மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமாக இருந்த மருது அழகுராஜ் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மருது அழகுராஜ் கூறுகையில், திமுகவில் இருந்து தானே அதிமுகவே உருவானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications