மீண்டும் அதிமுகவில் இணைந்தார் வினுபாலன்! வைத்திலிங்கம் ஆதரவாளரை தட்டித் தூக்கிய எடப்பாடி!
சென்னை: அதிமுக முன்னாள் திருச்சி மண்டல ஐடி விங் செயலாளர் வினுபாலன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வினுபாலன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மாவட்ட கவுன்சிலராக செயல்பட்டவர். அதிமுகவில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டபோது அவர்களது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறினர். ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டனர்.
அப்படி, ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்தார் வினுபாலன். கடந்த 2024 மார்ச் மாதம், வினுபாலனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ். கட்சி கொள்கை குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் வினு பாலனை நீக்குவதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வைத்திலிங்கம் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தில் நெருக்கமான ஆதரவாளராக அறியப்பட்ட வினுபாலன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் காமராஜ், ஒரத்தநாடு ஆ.சேகர் முன்னிலையில் அவர் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். முன்பு அதிமுக ஐடி விங்கில் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்ட வினு பாலன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் அதிமுகவினர் அவரை வரவேற்று வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சி மாறும் படலங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வினு பாலன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக அதிமுகவில் கூறுகின்றனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications