எம்ஜிஆரின் நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம் காலமானார்.. யார் இவர் தெரியுமா? பின்னணி
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உதவியாளராக இருந்த மகாலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
நடிகராக இருந்து தமிழக அரசியலில் ஜொலித்தவர்களில் முன்னோடியாக இருப்பவர் எம்ஜிஆர். அதிமுகவை உருவாக்கி முதலமைச்சர் பதவியையும் எட்டிப்பிடித்தார். எம்ஜிஆர் 1987 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார்.

எம்ஜிஆரிடம் ஏராளமானவர்கள் உதவியாளர்களாக பணியாற்றினர். அதில் முக்கியமானவர் மகாலிங்கம். இவர் சென்னை ஆர்ஏ புரத்தில் வசித்து வந்தார்.
சமீபத்தில் யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்து வந்தார். எம்ஜிஆர் உடனான உறவு உள்பட பல்வேறு விஷயங்களை அவர் யூடியூப் சேனல்களில் பகிர்ந்து வந்தார். மகாலிங்கத்துக்கு தற்போது 73 வயது ஆனது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மகாலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் காலமாகிவிட்டார். அண்மைக் காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த மகாலிங்கம் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறினார். அதோடு யாரும் உதவி செய்யவில்லை என வருத்தம் தெரிவித்து இருந்தார். இப்போது உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலமான மகாலிங்கம் எம்ஜிஆரிடம் 1972ம் ஆண்டு முதல் அவரது மறைவு வரையிலான 1987ம் ஆண்டு வரை நேர்முக உதவியாளராக இருந்தார். மகாலிங்கத்தின் தந்தை பெயர் குண்டு கருப்பையா. இவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகன் மகாலிங்கம். இவரது தம்பி நடிகர் குண்டு கல்யாணம்.
இன்னொரு சகோதரரின் பெயர் சாமிநாதன். இவர் அதிமுக தலைமை கழகத்தின் கேஷியராக பணியாற்றி இருந்தார். இப்படி மகாலிங்கத்தின் குடும்பத்தினர் எம்ஜிஆர் உடன் மிகவும் நெருக்கமாகவாக இருந்தனர். தந்தை குண்டு கருப்பையா மறைந்த பிறகு மகாலிங்கத்தை தனது நேர்முக உதவியாளராக எம்ஜிஆர் சேர்த்து கொண்டார்.
இதனால் மகாலிங்கம் தனது பல பேட்டிகளில் எம்ஜிஆரை தெய்வம் என்றே கூறி வந்தார். மேலும் அவரது தந்தை உள்பட குடும்பத்துக்கு இருந்த கடனை எம்ஜிஆர் தானே முன்வந்து செலுத்தியதாகவும், 3 தங்கை மற்றும் 2 சகோதரர்கள் மட்டுமின்றி தனது திருமணத்தை எம்ஜிஆரே முன்நின்றே நடத்தியதாகவும் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். தற்போது மகாலிங்கம் தனது 73வது வயதில் மறைந்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications