Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சியும் போச்சு.. சிக்கலுக்கு மேல் சிக்கல்! ஓபிஎஸ்க்கு வந்த அடுத்த தலைவலி..நாளைக்கு அரங்கேற்றம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பதவி பறிபோனது.. அதிமுகவில் இருந்து நீக்கம், நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து போட்டி வேட்பாளர்கள் என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்து விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் தனிப்பெரும் ஆளுமை கொண்ட தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் பொது செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து பல்வேறு சிக்கல்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

Former Chief Minister O Panneer Selvams asset hoarding case is being heard again before Justice Anand Venkatesh

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறைக்குச் செல்ல நேர்ந்த போதெல்லாம் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்: ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவே பல நேரங்களில் புகழ்ந்து பேசி இருக்கிறார். இருந்தபோதும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைந்த போது முதலமைச்சராக இருந்த அவர் அதற்குப் பிறகு சசிகலா நெருக்கடியால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு நள்ளிரவில் தர்ம யுத்தத்தையும் தொடங்க வேண்டி இருந்தது. தொடர்ந்து சசிகலாவும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் சமாதான தூதுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்

அதிமுகவில் சிக்கல்: எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள் ஓபிஎஸ் என பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமூகமாக சென்று கொண்டு இருந்த கட்சியில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார். அதிமுகவின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களும் கட்சியினரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரால் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை. ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு பிரச்சினை: இதனை அடுத்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைந்த அவர் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அது மட்டும் அவ்வளவு எளிதாக இருந்து விடவில்லை. பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே ஐந்து வேட்பாளர்கள் அவருக்கு எதிராக போட்டியிட்டது சிக்கலை ஏற்படுத்தியது. இப்படியாக கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பன்னீர் செல்வத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கு: பல ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டு விடுதலை பெற்ற வழக்கில் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு உட்படுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கையும் கையில் எடுத்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அதாவது 2001-2006 வரை பொதுப்பணி மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 2006ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

விடுதலை: இது தொடர்பான விசாரணை முடிந்து 2009ஆம் ஆண்டு தேர்வு தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குறிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை திரும்பப்பெற்றது அதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் விசாரணை: 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கூட இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதாக கூறியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த அவர் இந்த வழக்கின் காரணமாக கூடுதலாக சிக்கலை சந்திக்க வேண்டி இருந்தது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போதும் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும் வழக்கின் தன்மை தகுதியின் அடிப்படையில் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கிறார் எனக்கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனந்த் வெங்கடேஷ்: இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை நாளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடுத்து வைக்க இருக்கிறது. அதே நேரத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கம் போல பல்வேறு கேள்விகளை எடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்ல அமைச்சர்களாக இருக்கும் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் பல்வேறு வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+