திமுக முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டம் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டம் இன்று காலமானார். அவருக்கு வயது 99. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் கோதண்டம். வயது மூப்பு காரணமாக அவர் இன்று காலமானார்.
1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் கோதண்டம். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கோதண்டம், சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

அவரது மறைவு ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதி திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோதண்டத்தின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த கோதண்டத்தின் உடல், சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டத்தின் மகன் கோ.சத்தியமூர்த்தி, குன்றத்தூர் நகர திமுக செயலாளராகவும், குன்றத்தூர் நகர்மன்ற தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டம் மறைவை அடுத்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.கோதண்டம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக முன்னோடியான கோதண்டம் அவர்கள், கழகத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டவர்.
1989 மற்றும் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, திருப்பெரும்புதூர் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணி ஆற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது அன்பு மகன் - குன்றத்தூர் நகரத் தி.மு.கழகச் செயலாளரும் குன்றத்தூர் நகர்மன்றத் தலைவருமான தம்பி கோ.சத்தியமூர்த்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக உடன்பிறப்புகளுக்கும், திருப்பெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications