வாங்கிய பரஸ்பர விவாகரத்து.. மறுமணமும் செய்த பெண், குழந்தைக்கு பராமரிப்பு தொகை தரணுமா? கோர்ட் கருத்து
சென்னை: குழந்தைக்கு பராமரிப்புத் தொகை வழங்க மறுமணம் செய்துகொண்ட அவரது தாய்க்கு உத்தரவிடக்கோரி முன்னாள் மாமனார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார்.. இந்த மனுவானது நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஹைகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
பொதுவாக, ஒரு தந்தை, தான் சம்பாதித்த சொத்தை, உயில் எழுதாதபோதும், அவரது நேரடி வாரிசுகளுக்கு, அந்த சொத்தில் சமஉரிமை உள்ளது.

ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கோர முடியாது.
மறுமணம் செய்த பெண்
அதேபோல விவாகரத்தான பெண், மறுமணம் செய்யாத பட்சத்தில், அந்த பெண்ணின் வாரிசுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதா? என்ற சந்தேகம் வரலாம்..
வாரிசுரிமை சட்டத்தின்படி அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கு உள்ளது. எனவே, பெண்ணுக்கு விவாகரத்தாகி இருந்தாலும்சரி, முன்னாள் கணவர் மறுமணம் புரிந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் சரி, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது என்றெல்லாம் சட்ட விதிகள் கூறுகின்றன.
பராமரிப்புத் தொகை
அதேபோல கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், உடனே மனைவி, கணவரிடம் பராமரிப்புத் தொகை கேட்பது வழக்கமாகும்.. ஆனால் தனக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி, பராமரிப்பு தொகை கொடுக்க முடியாது என்று கணவர்கள் சொல்வதுண்டு.
இதுதொர்பாக சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையில், "வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்கவேண்டியது கணவரின் கடமை" என்று அலகாபாத் ஹைகோர்ட் தெளிவுபடுத்தி இருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், குழந்தைக்கு பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என்று, மறுமணம் செய்துகொண்ட அவரது தாய்க்கு உத்தரவிடக்கோரி மனு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதிகள், நேற்றைய தினம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?
வழக்கின் விவரம் இதுதான்:
ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வந்த காரணத்தால், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இப்போது கணவன், மனைவி இருவருமே வேறு வேறு நபர்களை 2வது திருமணம் செய்து கொண்டார்கள்.. தந்தை வழி தாத்தா, பாட்டி குடும்ப பராமரிப்பில் ஆண் குழந்தை வளர்கிறது.. அந்த குழந்தைக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையை அப்பா வழங்குகிறார்... மேலும், ஆண் குழந்தையின் பெயரில் பணம் டெபாசிட்டும் செய்துள்ளார்... இன்சூரன்ஸும் செலுத்துகிறார்.
தந்தை வழி தாத்தா
இந்நிலையில், குழந்தையின் பராமரிப்பு செலவை சமாளிக்க பராமரிப்புத்தொகை வழங்க தாய்க்கு உத்தரவிடக்கோரி தந்தை வழி தாத்தா சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "தந்தைவழி தாத்தா இயற்கையான பாதுகாவலர் கிடையாது.. அவர் இந்த மனுவை தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. குழந்தையின் இயற்கையான பாதுகாவலரான தந்தை உயிருடன்தான் உள்ளார். அதிலும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையிலேயே இருக்கிறார்" என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது..
கணவன், மனைவி பரஸ்பர விவாகரத்து
உடனே இந்த உத்தரவை எதிர்த்து குழந்தையின் சார்பில், தந்தை வழி தாத்தா மதுரை ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.. இந்த மனுவை நேற்றைய தினம் நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்..
நீதிபதி தன்னுடைய உத்தரவில், "கணவன், மனைவி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று விட்டார்கள்.. சட்டப்பூர்வமாக புதிய பாதைகளை தேர்ந்தெடுத்த பெற்றோரை அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும். அதே நேரம் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட முறையில் குழந்தையின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைக்கு பராமரிப்பு செலவு
தாயின் அமைதியான புது குடும்ப வாழ்க்கையை தொந்தரவு செய்யும் வகையில் தவறாக புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணம் தொடர்பாக முடிவுக்கு வந்த விவாகரத்தை மீண்டும் திறக்க பராமரிப்பு விதிகளை தவறாக பயன்படுத்துவதை இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது. எனவே, கீழமை நீதிமன்ற உத்தரவும் உறுதி செய்யப்படுகிறது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.












Click it and Unblock the Notifications