அதிமுகவிற்கு அடுத்த ஷாக்: புது வழக்கில் ஜெயக்குமார் கைது - மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்
கைதாகி சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ராயபுரம் 49வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர்.
அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் கூறி ஜெயக்குமார் தடுத்தார். பின்னர், அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.

ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு
திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து இழுத்துச் சென்ற இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு
ஐபிசி 147- கலவரத்தில் ஈடுபடுதல்.148- பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், 294(பி)- அவதூறாக பேசுதல். 153 இரு பிரிவினரிடையே கலவரம் செய்ய தூண்டுதல், 355- தாக்குதலில் ஈடுபடுதல், 323 தாக்குதலில் காயம் ஏற்படுத்துதல், 324- ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல், 506(2)- ஆயுதத்துடன் கொலை மிரட்டல். மற்றும் பொதுசொத்தை சேதப்படுத்தல் சட்டபிரிவுகளில் 2 பிரிவுகள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் கைது
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தேர்தல் நாளான 19ஆம் தேதியன்று ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஜாமின் மனு மீது விசாரணை
சனிக்கிழமை ராயபுரத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகே தன்னை தாக்கியதற்காக' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கொளஞ்சிநாதன், 49, ஸ்ரீதர், 46, சுதாகர், 43, ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனிடையே ஜெயகுமார் ஜாமின் வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெயக்குமார்.
Recommended Video

மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்
சாலைமறியல் செய்ததற்காக நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜெயக்குமார் மீண்டும் பூந்தமல்லி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications