மாணவர்களே திமுகவை நம்பாதீர்கள்.. எங்களுடன் வாருங்கள்.. 20-இல் ஆர்ப்பாட்டம் செய்வோம்- பொன்னார்
சென்னை: திமுகவுக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் நேற்று தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அங்கு ஆற்றிய உரையில் நாட்டை பாஜக குட்டிச்சுவராக்குகிறது என்றும் இந்தியாவை சீரழித்து வருகிறது. பிரிவினைவாதம் செய்ய முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வலிமையான கட்சி
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. திமுக உள்பட பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் வந்து இணைகின்றனர். இதனால் பாஜக தமிழகத்தில் வலிமையான கட்சியாக அமையும்.

திமுக எதிர்ப்பு
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத ரீதியாக மக்களை பிரித்தவர்கள் திமுக. இதுபோன்று பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் திமுக உட்கார்ந்தது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக எதிர்ப்பதால் அவர்கள் அந்த சட்டத்தை பற்றி ஆராயவில்லை.

போராட்டம்
இலங்கை தமிழர்களை பற்றி பேச திமுகவுக்கு அருகதையில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என்பது போல் தமிழகத்தில் திணிக்கிறார்கள். தமிழை வைத்து அரசியல் செய்து வரும் கட்சி திமுகவை நம்பி மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்.

ஆர்ப்பாட்டம்
மாணவர்களே எங்களை நம்பி வாங்க. தமிழ் மண்ணில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது. அனைத்து மாவட்டத்திலும் திமுகவின் பகல் வேஷத்தை கண்டித்து வரும் 20-இல் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications