எம்எல்ஏ விடுதியில் திடீர் பரபரப்பு.. முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,பெஞ்சமின் வருகை..தள்ளுமுள்ளு
சென்னை: சென்னை மற்றும் கோவையில் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கும் இடங்களுக்கு முன் அதிமுகவினர் குவிந்துள்ளதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதலே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ் பி வேலுமணி மீது உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சோதனை
திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த ஊழல் புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இந்த புகார்கள் அளிக்கப்பட்ட போது, அதில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இப்போது அதை தூசி தட்டி எடுத்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஆவணங்கள்
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்படி கோவை வடவள்ளியில் உள்ள வேலுமணி உறவினரும் கோவை மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியாகவும் உள்ள சந்திரசேகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

தள்ளுமுள்ளு
சோதனை பற்றிய தகவல் தெரிந்ததுமே கோவையில் சோதனை நடத்தும் எஸ் பி வேலுமணியின் வீட்டின் அதிமுகவினர் குவிந்தனர். குனியமுத்தூரில் போலீசார் கொண்டு வந்த இரும்பு தடுப்பையும் அதிமுகவினர் தூக்கிச் சென்றனர். இதையடுத்து அதிமுகவினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை
இன்று சட்டப்பேரவை அலுவல ஆய்வுக்குழு கூட்டம் என்பதால் அதிமுக கொறடா என்கிற முறையில் கலந்துகொள்ளச் சென்னை வந்தார் எஸ்.பி.வேலுமணி. அவரது ஆர்.ஏ.புரம் இல்லத்தில் ரெய்டு என்றவுடன் நேராகச் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்துவிட்டார். D block 10 என்கிற எண்ணில் அவருக்கு அறை உள்ளது, அங்குத் தங்கியிருந்தார். ஆனால் அவர் அங்கு இருப்பதை அறிந்து அங்கும் போலீஸார் வந்துவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமதாஸ் தலைமையில் 2 ஆய்வாளர்கள் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
Recommended Video

திடீர் தள்ளுமுள்ளு
ரெய்டு குறித்த தகவல் வெளியானதுமே, சென்னையிலுள்ள எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் , பெஞ்சமின் வந்துள்ளனர். எம்எல்ஏ விடுதி முன் இருக்கும் போலீசாருடனும் அதிமுகவின் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்து மா.செக்கள் 5 பேர் ராஜேஷ், ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, விருகை ரவி ஆகியோர் வந்தனர். அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்து உள்ளேச் சென்றனர். தொண்டர்களும் குவிந்துவிட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் வந்தனர் நீண்ட விசாரணைக்குப்பின் போலீஸார் உள்ளே அனுமதித்தனர். பின்னர் வெளியே வந்த ஆதிராஜாராம் 2 வழக்கறிஞர்களை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார். நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக சிசிடிவி டீம் மூலம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கண்காணித்து வருகிறார். இதனால் எம்எல்ஏக்கள் விடுதியின் முன் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications