ராமதாஸ் உடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. நேற்றுதானே அப்படி சொன்னாரு? பாமகவில் அடுத்த ஸ்டெப் என்ன?
சென்னை: சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவரது பேரன் முகுந்தன் இன்று சந்தித்து பேசியுள்ளார். பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த முகுந்தன், ராமதாஸை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்ததால் பாமகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு
இந்தச் சூழலில், பாஜகவின் மேலிடத்துடன் நெருக்கமாக உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை அண்மையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது பேரன் முகுந்தன் வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பாமகவில் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை அபிராமபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவரது பேரன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார்.
ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
சென்னை அபிராமபுரத்தில் உள்ள மகள் கவிதா இல்லத்தில் தங்கியிருக்கும் ராமதாஸை அவரது பேரன் முகுந்தன் சந்தித்துப் பேசினார். பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போதுதான் முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்து பேசி உள்ளார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள்" என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அண்மையில் அறிவித்தார். மருத்துவர் அய்யா தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் முகுந்தன் தெரிவித்திருந்தார்.
யார் இந்த முகுந்தன்?
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக, முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தன் இன்று முதல் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்" என்றார்.
பாமகவில் வெடித்த மோதல்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "அவன் 4 மாதம் முன்புதான் வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் உள்ளது? அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? நல்ல அனுபவசாலியாக போடுங்கள்" என்றார். அதற்கு பதில் சொன்ன ராமதாஸ், "நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும். கேட்கலைன்னா, யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இதுநான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது" என்றார். அப்போது வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
-
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications