விளாத்திகுளம் தொகுதி அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் திமுகவில் ஐக்கியம்!
சென்னை: விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
2016 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர்.

இதனால் உமா மகேஸ்வரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2019-ல் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தமக்கு சீட் வழங்க வேண்டு என்று அத்தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் (2011-16) மல்லுக்கட்டிப் பார்த்தார்.
ஆனால் மார்க்கண்டேயனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்குப் பதில் சின்னப்பன், அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சின்னப்பனை எதிர்த்து மார்க்கண்டேயன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து மார்க்கண்டேயன் நீக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் அதிமுகவின் சின்னப்பன் 70,139 வாக்குகள் பெற்று அமோக வெற்றியைப் பெற்றார். திமுகவின் ஜெயக்குமார் 41,585 வாக்குகளைப் பெற்றார். 3-வதாக வந்த மார்க்கண்டேயன் 27,456 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து தனக்கான தனிப்பட்ட செல்வாக்கை காட்டினார். இது அதிமுகவினரையே அதிரவும் வைத்தது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்த மார்க்கண்டேயன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications