Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான்கு முனை போட்டின்னா லாபம் திமுகவுக்கே.. 134 சீட் அதிமுகவுக்கு பிளஸ்? வட மாவட்ட அரசியல் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது? பலவீனமான கூட்டணி அமைந்துவிட்டால், அது தவெக விஜய்க்கு சாதகமாக போகுமா? என்றெல்லாம் கணிப்புகள் அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.. வரப்போகும் தேர்தலில் அதிமுக 100 சீட்களுடன் களமிறங்கி போட்டியிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. இது சாத்தியமா?

கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகள் எப்படி மீண்டும் அமைந்து வருகின்றன என்பதை தெளிவாக காட்டியிருந்தன..

Four Corner Fight DMK ADMK

39 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 46.97 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது.. ஆனால், அதிமுக தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இருந்த கூட்டணி வெறும் 23.05 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது..

அதிமுக, பாஜக வாக்குகள்

பாஜக, பாமக, அமமுக, தமாகா, தேசிய ஜனநாயக கூட்டணி என மொத்தம் 18.28 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது..
.
அதாவது அதிமுக 28 தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்திருந்தது, அக்கட்சி தொண்டர்களுக்கே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்திருந்ததை மறுக்க முடியாது..

அதேசமயம் பாஜக கூட்டணி 11 தொகுதிகளில் 2ம் இடத்தில் முன்னிலை வகித்தது.. 234 தொகுதிகளில், 80 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணியை விட முன்னிலை வகித்ததாக கணக்கிடப்படுகிறது. இதுதான் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பூஸ்ட்டாக இருந்து வருகிறது.

எனவேதான், அந்த 80 தொகுதிகளில் 75 இடங்களில் பாஜக போட்டியிட வேண்டும் என்று தமிழக பாஜக ஆசைப்படுகிறது.. இதைத்தான் அமித்ஷாவிடமும் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது..

100 தொகுதிகளில் அதிமுக

ஆனால், அதிமுகவிடன் நிலைப்பாடு இதுவரை உறுதியாக தெரியவில்லை.. 234 தொகுதிகளில் 134 இடங்களில் நேரடியாக போட்டியிடவும், மீதமுள்ள 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாம் அதிமுக..

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற 18.28 சதவீத ஓட்டுகளை அடிப்படையாக கொண்டு, பாஜகவுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.. ஒருவேளை பாமக இணைந்தால் அக்கடசிக்கு 30 வரை தொகுதிகள் வழங்க வாய்ப்பு உள்ளது. தமாகா உள்ளிட்ட மற்ற சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ், தேமுதிக நிலைப்பாடு?

இதில், தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையும் பட்சத்தில், அந்த கட்சிக்கு 18 தொகுதிகள் வழங்க வேண்டிய சூழல் உருவாகும். அப்படி நடந்தால், பாஜக, பாமகவுக்கான தொகுதிகள் குறைக்கப்படும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.. அது நடந்தால், அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக கூடுதல் பலம் கிடைக்கலாம்.. எனினும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு, கூட்டணி அரசியலில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

பாமக வீக்னஸ் - விஜய்க்கு பலம்

கடந்த எம்பி தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், 23.05 சதவீத ஓட்டுகளையும், 28 தொகுதிகளில் 2ம் இடத்தையும் பிடித்திருந்தன.. ஆனால், அந்த நேரத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை முறித்து, ஆளுக்கொரு பக்கம் தனித்தனியாக போட்டியிட்டன.. அப்போதே இணைந்து போட்டியிட்டிருந்தால் பல இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்..

இப்போது மீண்டும் ஒன்றிணைந்து போட்டியிடுவதாலும், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாலும் வெற்றி வாய்ப்பு கணிசமாகவே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து கூறுகிறார்கள்.

ஆனாலும், பாமகவின் குடும்ப மோதல், அக்கட்சியின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருந்ததாக கூறப்படும் 10 சதவீத வாக்குகள் யாருக்கு செல்லும் என்பது தெரியவில்லை.. அந்த இடத்தை விஜய்யின் தவெக மெதுவாக பிடிக்க துவங்கிவிட்டதாக தெரிகிறது.

நான்கு முனை போட்டி

இந்த எல்லா சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழகத்தில் 4 முனைப் போட்டி உருவாக வாய்ப்புண்டு என்றும், அதனால் அதிக பயனடைவது ஆளும் திமுக கூட்டணியே என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்து கூறுகிறார்கள்..

அதாவது, எதிர்க்கட்சிகள் ஒருமித்தமாக செயல்படாத வரை, திமுக தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வது எளிதாக இருக்கும்.. அத்துடன் 2ம் இடத்திற்கான போட்டியில் தவெக முன்னேறி, அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+