மின்வெட்டு பிரச்சனைக்கு பலிகடா.. மின்சார வாரிய இயக்குநர் தூக்கியடிப்பு!
சென்னை: தமிழகம் முழுவதும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மின்சார வாரிய புதிய இயக்குநராக ராஜேஸ் லக்கானி ஐஏஎஸ், புதிய உள்துறை செயலாளராக A.கார்த்திக் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த கே.மணிவாசன் ஐஏஎஸ் தற்போது நில நிர்வாக துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையராக புதிய பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் இதற்கு முன்பு இருந்தார்.

அதே போல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த A.கார்த்திக் ஐஏஎஸ் உள்துறை> மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையின் முதன்மை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெக ஆட்சிக்கு மின்வெட்டு பெரிய சவாலாக இருக்கும் நிலையில் இதை சமாளிக்க, மினசார வாரிய ஆணையர் மாற்றப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியம் டான்ஜெட்கோ, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆகியவற்றின் தலைமை மற்றும் இயக்குனராக இருந்த வி.அருண் ராய் ஐஏஎஸ் நிதி துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில், நில நிர்வாகத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டான்ஜெட்கோ ஆகியவற்றின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை சக்தி கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நிதித்துறையின் செயலாளராக இருந்த என் வெங்கடேஷ் ஐஏஎஸ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
