கேட்கவே உடம்பு சிலிர்க்குதே.. சென்னை பணிப்பெண் கொலை.. வழக்கில் வந்த புதிய ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் 15 வயது சிறுமியை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும் நண்பர்கள் ஆகியோரால் மூன்று மாதங்களாக அந்த சிறுமி தொந்தரவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் மைனர் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் போஸ்ட்மார்ட்டம் தொடர்பான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1. அந்த சிறுமியிடம் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. முதுகில் காயங்கள் இருந்துள்ளன.
2. முதுகிலும், கைகளிலும் அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்த காயங்கள் உள்ளன.
3. உடல் முழுக்க பல இடங்களில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளன.
4. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். இதனால் அவரின் குடல் வெறுமையாக இருந்துள்ளது.
5. அவர் உடல் அழுகிப்போய் உள்ளது. பலியான பின் அவர் பாத்ரூமில் வைக்கப்பட்டதால் அவர் உடல் அழுகிப்போய் உள்ளது
6. அவரின் மரணம் கடுமையான காயங்கள் காரணமாக ஏற்பட்டு உள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
7. அவரின் கால், கைகளில் தசை நார்கள் கிழிந்து உள்ளன . பல நாட்களாக அவர் கொடுமை படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வழக்கு பின்னணி: சென்னையில் 15 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்புடைய தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, மைனர் சிறுமி கடுமையாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சூடான இரும்பு மற்றும் சிகரெட் துண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள் அந்த சிறுமியின் உடலில் இருந்து உள்ளது. அந்த சிறுமி தஞ்சாவூரை சேர்ந்தவர். பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த 1 வருடத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், அமிஞ்சிக்கரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.
தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்ட நிலையில்.. ஒரு வாய் எடுத்து சாப்பிட்டதற்கு இப்படி கொடூரமாய் கொலை செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், முகமது நிஷாத் மற்றும் நசியா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
வீடு முழுக்க அகர்பத்தி ஏற்றிவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர். சிறுமியின் உடலை தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு அந்த இரண்டு பேரும் உறவினரின் வீட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. முதலில் கொலையில் இருந்து தப்பிக்கவே முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் வழங்கறிஞர் சரண்டர் ஆவதே சரி என்று அறிவுரை செய்துள்ளார். இதையடுத்து இந்த மரணம் குறித்து அவரது வழக்கறிஞர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications