ஃபாக்ஸ்கான்.. பெகட்ரான்.. ஒம்ரான்.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குவிந்த முதலீடுகள்.. சூப்பர் செய்தி
சென்னை: தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தடுத்து முக்கிய நிறுவனங்கள் பல முதலீடுகள் செய்து வருகின்றன.
ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்தனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் இணை நிறுவனமான பாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் அங்கே முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதே சமயம் இன்னொரு பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஃபாக்ஸ்கான் : முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக இணையத்தில் பொய்யான தகவல்கள் பரவினாலும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனமும், கர்நாடகாவில் ஃபாக்ஸ்கானின் கிளை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது.
அதன்படி 200 மில்லியன் டாலரை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளது பாக்ஸ்கான். தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முதலீட்டை செய்ய உள்ளதாம். மின்னணு பொருட்களை உருவாக்கும் பிளாண்ட்களை இங்கே அமைக்க உள்ளதாம் பாக்ஸ்கான்.
இன்னொரு பக்கம் தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பெகட்ரான் உலகில் உள்ள முன்னணி மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை இறங்கி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினை தைவான் நாட்டைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனத்தின் குழுமத் தலைவர் திரு.டிஎச் துங்(TH Tung) சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்காக இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது போக மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. உதாரணமாக தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இப்படி மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் கலக்கி வரும் சென்னை இன்னொரு சாதனையை படைத்துள்ளது. அதன்படி சென்னையில் ஒம்ரான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இவர்கள்தான்உலகின் நம்பர் மருத்துவ எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
128 கோடி ரூபாய்க்கு இவர்கள் பிளான்ட் ஒன்றை மஹிந்திரா ஓர்கினிசில் பொன்னேரியில் தங்கள் பிளாண்ட்டை அமைத்து உள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம்தான் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 மாதங்களில் இங்கே உற்பத்தி தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications