செந்தில் பாலாஜி தரப்பில் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்.. குற்றச்சாட்டு நாளை பதிவு செய்யப்படுமா?
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கைது செய்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி புதிதாக 2 மனுக்களை தாக்கல் செய்தார். அதில், 'சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. எனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டது. இந்த வழக்கில் கடந்த 18 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது".
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரியுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் இந்த புதிய மனுவால் நாளை குற்றச்சாட்டு பதிவு செய்வது தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை நாளை நேரில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், செந்தில் பாலாஜி தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஐசியூ வார்டில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், செந்தில் பாலாஜி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications