ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்?
சென்னை: "அண்ணன் - தம்பி எல்லாம் வீட்டுல தான்.. கட்சினு வந்துட்டா யார் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவது தான் அரசியல்" என ஆண்டிப்பட்டியில் மீண்டும் நடக்கிறது சகோதர யுத்தம். இந்த முறையும் ஆண்டிப்பட்டியில் திமுக - அதிமுக இடையே அண்ணன் தம்பி இடையே நேருக்கு நேர் மோதல் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதி, முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இருந்து வருகிறது. 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தவாரே, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்யாமல், அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே எம்ஜிஆர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தான் மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
தமிழக அரசியல் களத்தில், உற்றுநோக்கும் தொகுதியாக கருதப்படும் ஆண்டிப்பட்டி தொகுதி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் பரபரப்பானது. இதற்கு முக்கிய காரணம் அந்த தேர்தலில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தான். அந்த தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட இருவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இரு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது தான் அந்த தேர்தலின் சிறப்பம்சம். அதாவது திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். அதில் அண்ணன் மகாராஜன், 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தம்பி லோகிராஜனை தோற்கடித்தார். இதன்மூலம் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆண்டிப்பட்டி, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக வசம் வந்தது.
அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் மகாராஜன் - லோகிராஜன் சகோதரர்கள் மீண்டும் எதிர் எதிராக நின்று மோதினர். அதிலும் அண்ணன் மகாராஜன் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் இந்த முறை எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும்? யார் போட்டியிடுவது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், அதிமுக சார்பில் மீண்டும் லோகிராஜன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மகாராஜன் மூன்றாம் முறையாக களம் காண்கிறார். இதனால் மூன்றாவது முறையாக அண்ணன் தம்பி நேருக்கு நேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை, அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக 2019 இடைத்தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகள், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் என்று பார்த்தால் 2019 இடைத்தேர்தல் 12 ஆயிரம், 8,500 என்றே இருந்தது.
அதிமுகவும், அமமுகவும் தனித்தனியே போட்டியிட்டதுதான், அதிமுக கோட்டை என கருதப்பட்ட ஆண்டிப்பட்டி திமுக வசம் சென்றத்திற்கு காரணம் எனப் பேசப்பட்டது. ஆனால், இந்த முறை அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்து உள்ளதால், வாக்குகள் பிரியாமல் மொத்தமாக அதிமுகவின் வசம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை மிகக் கடும் போட்டி நிலவக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த சகோதர யுத்தத்தில் யார் வாகை சூடுவார்கள் என்பது மே 4 ஆம் தேதி தெரியவரும்.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?












Click it and Unblock the Notifications