நீங்க வாங்கிய வாட்சுக்கு ரூ.13 லட்சம் கார் பரிசுங்க.. ஆசையை தூண்டிய ஃபோன் கால்! ஏமாந்த சென்னை நபர்!
சென்னை: வாட்ச் வாங்கிய சென்னையை சேர்ந்த நபருக்கு 13 லட்சம் ரூபாய் கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டமாதூரை சேர்ந்தவர் அனந்த குமார். இவர் கடந்த ஆண்டில் ஆன்லைன் மூலமாக தனக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கைக்கடிகாரம் கையில் கிடைத்த சில நாட்களிலேயே அவர் எந்த நம்பரில் இருந்து கைக்கடிகாரம் ஆர்டர் செய்திருந்தாரோ அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு கால் வந்தது.

ரூ. 13 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு
அனந்தகுமாரும் அந்த காலை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் தற்போது புதிதாக வாட்ச் ஒன்று வாங்கியுள்ளீர்கள் அல்லவா?..அந்த வாட்ச்க்கு மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. என்று கூறியுள்ளார். அனந்த குமாரும் மிகப்பெரிய பரிசுனா என்ன என்று கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், சார் வணக்கம்.. நீங்கள் வாங்கிய கைக்கடிகாரத்துக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாருதி சுசுக்கி கார் பரிசாக கிடைத்துள்ளது சார் என்று கூறியுள்ளார். மேலும் உடனடியாக இந்த கார் உங்கள் வீட்டுக்கு வந்த சேர ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்டதும் அனந்தகுமாருக்கு 'மனசுக்குள் ஆயிரம் பட்டர்பிளை பறப்பது போல் இருந்துள்ளது'. இதனால் அவரும் உடனடியாக கொண்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 58 ஆயிரம்
அப்போது மறுமுனையில் பேசிய நபர், கார் உங்கள் முகவரிக்கு அனுப்ப தயார் நிலையில் தான் உள்ளது. ஆனால் இந்த காருக்கு நீங்கள் வரியாக முதலில் 58 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். அப்படி நீங்கள் பணத்தை கட்டினால் தான் உங்கள் முகவரிக்கு கார் வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சற்று மனசு வலித்தாலும், 13 லட்ச ரூபாய் கார் அல்லவா.. அதற்காக ஒரு 58 ஆயிரம் செலவழித்தால் தான் என்ன. . என மனதில் நினைத்துக்கொண்டு அனந்த குமாரும் அந்த நபர் கூறியிருந்த அக்கவுண்டுக்கு கேட்டதொகையில் ஒரு ரூபாயை கூட குறைக்காமல் அப்படியே ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து 6 லட்சம் ரூபாய்
இதைத்தொடர்ந்து மறுமுனையில் பேசிய நபர், சார் இந்த பணமானது நீங்கள் அனுப்பி விட்டீர்கள். ஆனால் எங்கள் டீமிடம் இது வந்து சேரவில்லை. 48 மணி நேரத்துக்குள் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. ஆனால் அந்த பணம் இன்றே வந்து சேர்ந்தால் தான் எங்களால் காரை டெலிவரி செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அனந்தகுமார் மீண்டும் அந்த தொகையை அனுப்பியுள்ளார். தொடர்ந்து எதிர் முனையில் பேசிய நபர் அப்படி.. இப்படி.. என பல்வேறு நம்பும்படியான பொய்களை கட்டவிழ்த்துவிட்டு மேலும் மேலும் ரூபாயை கேட்டுள்ளார். எனினும் அனந்தகுமாரோ சரி எவ்வளவு பணமோ செலவு செய்கிறோம்... எப்படியும் 13 லட்ச ரூபாய் கார் கிடைத்துவிடும் அல்லவா.. அதை வைத்து சமாளித்து கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு நண்பர்கள் பலரிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

போலீசில் புகார்
இவ்வாறாக மொத்தம் ரூபாய் 6 லட்சத்து 34 ஆயிரத்தை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இவ்வளவு காசு அனுப்பியும் கார் வீடு வந்து சேர்ந்தபாடில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனந்தகுமார், அந்த நபருக்கு அழைத்தார். அப்போது அவரது எண் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதனால் அனந்த குமார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனந்த குமார் இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த செல்போன் நம்பரை டிரேஸ் செய்து பார்த்தனர். அப்போது அந்த எண் டெல்லியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று முமாமிட்டு அவர்களை தேடினர்.

சிறையில் அடைப்பு
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி குறிப்பிட்ட அந்த நபரை கையும் களவுமாக பிடித்து கைது செயதனர். மேலும் அந்த நபருடன் இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ரோகித், ராம்ஹல்ஹான் கிசான், ஹரியான மாநிலத்தை சேர்ந்த அங்கித் பன்சார் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருந்த அறையில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், ஒரு பிரிண்டிங்க் மிஷன், லேப்டாப், 10 செல்போன்கள் மற்றும் ஏராளமான சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட அந்த வடமாநில கும்பலினை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications