சென்னையில் 100000க்கு வாடகைக்கு விடக்கூடிய வீடு.. வெறும் 9 லட்சத்திற்கு லீஸ்.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் நல்ல வீடு ஓரளவு நியாயமான வாடகைக்கு கிடைப்பது கடினம் என்கிற நிலை உள்ளது. இந்த சூழலில் ஓரளவு நல்ல வீடு, நியாயமான குத்தகையில் வீடு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இதை பயன்படுத்தி வேறு ஒருவரின் வீட்டை காட்டி குத்தகைக்கு விடுவதாக ஏமாற்றி பணம் சம்பாதிப்பது சென்னையில் நடக்கிறது. குறிப்பாக வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை அல்லது ஓனர் வெளியூரில் வசிக்கிறார் என்றால், குறைந்தபணம் லீஸ் என்ற பொறி வைத்து மோசடி செய்கிறார்கள். அப்படித்தான் சென்னை அயனாவரத்தில் 9 லட்சம் மோசடி நடந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை "சொந்த வீடுதான் வாங்க முடியல, ஒரு நிம்மதியான வாடகை வீடாவது கிடைக்குமா? அல்லது குத்தகைக்கு வீடு கிடைக்குமா" என்று ஏங்கும் நடுத்தர மக்களின் நம்பிக்கையை முதலீடாக்கி, சென்னையில் ஒரு கும்பல் அரங்கேற்றி வரும் 'குத்தகை மோசடி' இப்போது பல குடும்பங்களை தற்போது நடுத்தெருவில் நிறுத்தி வருகிறது

ஆசை காட்டி மோசம் செய்யும் 'போலி' உரிமையாளர்கள்
சென்னையில் அயனாவரம், அம்பத்தூர், பள்ளிக்கரணை, தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த மோசடி சர்வ சாதாரணமாக தற்போது அரங்கேறுகிறது. இவர்களது பாணி மிகவும் நுணுக்கமானது. ஆடம்பரமான ஒரு வீட்டை காண்பிக்கிறார்கள். "அவசர பணத்தேவை, அதான் ஒரு லட்சத்திற்கு வாடகைக்கு விட வேண்டிய வீட்டை 5 லட்சத்திற்கு குத்தகைக்கு விடுகிறேன்" என ஆசை வார்த்தை கூறுவார்கள். வீட்டை பார்த்து பிரம்மிக்கும் மக்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்பையும், நகைகளையும் அடகு வைத்து அந்தப் பணத்தை கொடுக்கிறார்கள். ஆனால், வீட்டின் சாவியை வாங்கும் நாளில் தான் தெரிகிறது - அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் வேறு யாரோ என்று!
"எங்க உழைப்பு எல்லாம் போச்சுங்க.."
மோசடி கும்பலிடம் பல லட்சங்களை இழந்து பலர் பரிதவிக்கிறார்கள் "பத்து வருஷ சேமிப்புங்க அது. என் பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த நகையை அடகு வச்சு, வாடகை மிச்சமாகும்னு குத்தகைக்கு பணம் கொடுத்தேன். இன்னைக்கு பணமும் போச்சு, தங்க இடமும் இல்லாம வாடகை வீட்டுலையே முடங்கிக் கிடக்கிறோம். போலீஸ் ஸ்டேஷன் போனா 'விசாரணை நடக்குது'னு சொல்றாங்க. ஆனா எங்க பணம் வருமான்னு தெரியல.." என்று அண்மையில் ஒருவர் பேசியிருந்தார்.
எப்படி ஏமாற்றுகிறார்கள்?
வீட்டின் உரிமையாளர் போலவே ஆவணங்களை தயார் செய்து காட்டுகிறார்கள். முதலில் ஒரு வீட்டை இவர்கள் வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டை தங்களது சொந்த வீடு போல காட்டி மற்றவர்களிடம் பல லட்சங்களை குத்தகைக்கு வாங்குகிறார்கள். பணம் கைக்கு வந்தவுடன், செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள்.
பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை
வீட்டின் அசல் ஆவணங்களை சரிபார்க்காமல் ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வீட்டு வரி ரசீது, மின்சாரக் கட்டண அட்டை ஆகியவற்றில் உள்ள பெயரைச் சரிபார்க்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பதை ரகசியமாக விசாரிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆசை காட்டி மோசம் செய்பவர்களிடம் ஏமாறாமல் இருப்பதே இப்போதைக்கு ஒரே வழியாக இருக்கிறது. சென்னை அயனாவரத்தில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.
அயனாவரத்தில் எப்படி மோசடி நடந்தது
சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த 45 வயதாகும் தீனதயாளன் என்பவர் குடியிருக்க குத்தகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தார். இதையறிந்த அயனாவரத்தை சேர்ந்த அப்துல் கரீம்(47) என்ற தரகர், பாபு என்பவருக்கு சொந்தமான வீடு அயனாவரம் மேட்டு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளதாக கூறி அந்த வீட்டை தீனதயாளனிடம் காட்டியிருக்கிறார்.
குத்தகை வீடு மோசடி
குத்தகைக்காக ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்து கேட்டுள்ளார். இதையடுத்து தீனதயாளன் முதல் கட்டமாக ரூ.9 லட்சத்தை அப்துல் கரீம் முன்னிலையில் பாபுவிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பாபு, வீட்டையும் கொடுக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தாராம். மேலும் யாரோ ஒருவரின் வீட்டைக் காட்டி இருவரும் மோசடி செய்துவிட்டதும் தீனதயாளனுக்கு தெரியவந்திருக்கிறது. இது குறித்த புகாரின்பேரில் அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தரகர் அப்துல் கரீமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications