மாநகர பேருந்துகளில் சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச பஸ் பாஸ் டோக்கன்! ஜூலை 21 முதல் விநியோகம்!
சென்னை: ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநகர் போக்குவரத்து கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டோர்) ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் அல்லது புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வரும் 21 -ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31-ஆம் தேதி காலை 8.00 மணி முதல் இரவு 7.30 வரை வழங்கப்படும். அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள்: சென்னை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று அல்லது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 2 வண்ண புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் இடங்கள்:-
வ.எண் பணிமனை / பேருந்து நிலையங்கள்
1. அடையாறு
2. பெசன்ட் நகர்
3. திருவான்மியூர்
4. மந்தைவெளி
5. தியாகராயநகர்
6. சைதாப்பேட்டை
7. சைதாப்பேட்டை பேருந்து நிலையம்
8. மத்திய பணிமனை
9. சென்ட்ரல் ரயில் நிலையம்
10. பிராட்வே
11. குரோம்பேட்டை-1
12. பல்லாவரம்
13. ஆலந்தூர்
14. கிண்டி எஸ்டேட்
15. அய்யப்பன் தாங்கல்
16. வடபழனி
17. கே.கே.நகர்
18. ஆதம்பாக்கம்
19. வேளச்சேரி
20. அண்ணாநகர்
21. கோயம்பேடு
22. அம்பத்தூர் எஸ்டேட்
23. அம்பத்தூர் ஓ.டி
24. ஆவடி
25. அயனாவரம்
26. வில்லிவாக்கம்
27. தண்டையார்பேட்டை-1
28. சுங்கச்சாவடி
29. எண்ணூர்
30. வியாசர்பாடி
31. M.K.B.நகர்
32. மாதவரம்
33. பாடியநல்லூர்
34. செங்குன்றம்
35. தாம்பரம் - மெப்ஸ் பேருந்து நிலையம்
36. பூந்தமல்லி
37. பெரம்பூர் பேருந்து நிலையம்
38. வள்ளலார் நகர்
39. செம்மஞ்சேரி
40. திருவொற்றியூர்
41. கிளாம்பாக்கம்
42. குன்றத்தூர் பேருந்து நிலையம்

மேற்கண்ட பணிமனை அல்லது பேருந்து நிலையங்களில் உரிய ஆவணங்களைக் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்" என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர பெண்களுக்கு மாதம் ரூ 1000 வரை சேமிப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த திட்டம் திருநங்கைகளுக்கும் பொருந்தும். இதனால் அவர்களும் பொது போக்குவரத்தில் இலவசமாக பயணிக்கிறார்கள். இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கும் இலவச பயணம் செய்ய டோக்கன் வழங்கப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications