வேற லெவல்.. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா 2.0.. இலவச கேஸ் சிலிண்டர்.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களுக்காகவே, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

இலவச அறிவிப்பு: பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின்படி, காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது... அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஸ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் இப்படியான விபத்துகள் நடந்துவிட்டால், கஸ்டமர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது.
காப்பீடு தொகைகள்: இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்துள்ளன.. மொத்தத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்ப தலைவிக்கு, கேஸ் அடுப்பு, அதற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவை மத்திய அரசு வழங்குகிறது.
சலுகைகள்: இப்படிப்பட்ட சூழலில், விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், பெரும்பாலான திட்டங்களை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி, அம்மாநிலத்தின் தகுதியுள்ள 1.75 கோடி குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்க உள்ளதாக அதிரடியாக முதல்வர் யோகி அறிவித்திருந்தார். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது, வருடத்துக்கு 2 முறை இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம்.. இதற்காக மாநில அரசு ரூ.2,312 கோடி செலவு செய்வதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
சூப்பர் தகவல்: இந்நிலையில், மத்திய அரசு ஒரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.. இலவச கேஸ் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 32 லட்சம் பயனாளிகளுக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை, இந்த நிதியாண்டில் இருந்து மேலும் 3 வருடங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.. இந்தியா முழுவதுமே, 1,650 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக, 75 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த 2023 அக்டோபரில் இருந்து ஆரம்பமாகி உள்ளது..
கேஸ் இணைப்புகள்: தமிழகத்தில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கிராமங்களில் சென்று பயனாளிகளை தேர்வு செய்து, கேஸ் இணைப்பு வழங்கினர். அந்தவகையில், இதுவரை, தமிழகத்தில் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தில் ஒட்டு மொத்தமாக, 37 லட்சம் பயனாளிகளுக்கு காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், மத்திய அரசு முன்னெடுத்து வரும் இதுபோன்ற அதிரடிகள், நிச்சயம் பொதுமக்களின் ஆதரவை அபரிமிதமாகவே பெற்றுத்தரும் என்று நம்பப்டுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications